காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: செங்கோட்டையைச் சேர்ந்த சந்திரசேகர் வீரமரணம்!

சற்றுமுன் தமிழகம் நெல்லை
chandrasekar sengottai armyman   செங்கோட்டை மூன்று வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த  ராணுவ வீரர் சந்திரசேகர் வீரமரணம்
chandrasekar sengottai armyman chandrasekar sengottai armyman செங்கோட்டை மூன்று வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்திரசேகர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்டம் செங்கோட்டை மூன்று வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த 31 வயதான ராணுவ வீரர் சந்திரசேகர் வீரமரணம் அடைந்தார்.

ஜம்மு -காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் கிரால்குண்ட் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த வீரரும் வீரமரணம் அடைந்தார். சிஆர்பிஎப்-ன் 92வது பட்டாலியன் சேர்ந்த 31 வயதான சந்திரசேகர், தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.