527 பேருக்கு புதிதாக கொரோனா; அதிர்ச்சியில் தமிழகம்!

Published:

tamilnaducorona
tamilnaducorona

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 3 ஆயிரத்து 3 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிப்பில் இருந்து ஆயிரத்து 379 பேர் குணமடைந்திருந்தனர். மேலும், வைரசுக்கு 30 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உள்ளது. மேலும், ஆயிரத்து 409 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியான கொரோனா தொற்று நிலவரம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. இதனால் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவியவர்களில் ஆயிரத்து 409 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் விவரம்:-

அரியலூர் – 34
செங்கல்பட்டு – 97
சென்னை – 1,724
கோவை – 146
கடலூர் – 161
தர்மபுரி – 1
திண்டுக்கல் – 91
ஈரோடு – 70
கள்ளக்குறிச்சி – 15
காஞ்சிபுரம் – 41
கன்னியாகுமரி – 17
கரூர் – 44
கிருஷ்ணகிரி – 0
மதுரை – 91
நாகப்பட்டினம் – 45
நாமக்கல் – 61
நீலகிரி – 9
பெரம்பலூர் – 36
புதுக்கோட்டை – 1
ராமநாதபுரம் – 21
ராணிப்பேட்டை – 43
சேலம் – 33
சிவகங்கை – 12
தென்காசி – 49
தஞ்சாவூர் – 58
தேனி – 44
திருப்பத்தூர் – 19
திருவள்ளூர் – 79
திருவண்ணாமலை – 27
திருவாரூர் – 31
தூத்துக்குடி – 27
திருநெல்வேலி – 63
திருப்பூர் – 114
திருச்சி – 55
வேலூர் – 22
விழுப்புரம் – 135
விருதுநகர் – 34

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

மொத்தம் – 3,550

Related articles

Recent articles

spot_img