
தமிழகம் முழுவதும் உச்ச நீதிமன்ற அனுமதியின் பேரில், மீண்டும் திறக்கப் பட்ட டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 163 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது.
முன்னதாக, பல்வேறு கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி தந்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆயினும் அந்த உத்தரவுகள் மீறப்பட்டதாக பதிவு செய்யப் பட்ட புகார்களை அடுத்து, டாஸ்மாக் கடைகளை மூடும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் இரு நாட்களே டாஸ்மாக் விற்பனை நடந்தது.
பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால் ஒரு வாரத்திற்கு பின்னர் தமிழகத்தில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் நேற்று மீண்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 163 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையாகியுள்ளது. இதில், சென்னை மண்டலத்தில் 4 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் சுமார் 45 கோடி ரூபாய்க்கும் மது விற்றுள்ளது. சேலம் மண்டலத்தில் 41 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 33 கோடி ரூபாய்க்கும் மது விற்றுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் நேற்றைய விற்பனை ரூ.163 கோடி! சென்னை மண்டலம் ரூ. 4.2 காேடி
திருச்சி மண்டலம் ரூ 40.5 காேடி
மதுரை மண்டலம் ரூ. 44.7 காேடி
சேலம் மண்டலம் – ரூ. 41.07 காேடி
காேவை மண்டலம் – ரூ.33 .05 காேடி



