
தமிழகத்தில் மேலும் 874 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப் பட்டது. தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 20ஆயிரத்தைக் கடந்தது.
இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது சுகாதாரத் துறை. அதில்.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து, வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,362 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 150ஐ கடந்துள்ளது உயிரிழப்பு எண்ணிக்கை! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த 7 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூரை சேர்ந்த தலா ஒருவர் இன்று மரணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மேலும் 874 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 20246ஆக உயர்ந்துள்ளது. அதே போல், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் இது வரை இல்லாத அளவு 24 மணி நேரத்தில் 7,466 புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப் பட்டன.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 7,466 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளது
இன்று காலை சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 7,466 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளது. 24 மணி நேர காலப்பகுதியில் 7,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும், கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 175 ஆகும் என கூறப்பட்டு உள்ளது
மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்து உள்ளது. 71,106 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 4,706 ஆக உள்ளது என கூறப்பட்டு உள்ளது.
