
சிவகங்கை: மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களையே, அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக, தமிழக கதர்துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் பேசினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம் துலாவூர், தட்டடி கொராட்டி ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை 600 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை அவர் வழங்கி பேசியது:
அரசின் நோக்கமே, திட்டங்கள் யாவும் கடைக்கோடி மக்களை சென்று அடையவே விரும்புகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் பழுதான சாலைகள், பாலங்கள் ஆகியவை துரிதமாக சீரமைக்கப்படுகிறது.ரேசன் கடைகளில் விலையில்லா அரிசி வாங்க டோக்கன் பெற்றவர்கள், கட்டாயம் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பால்வளத் தலைவர் அசோகன், வங்கி இயக்குநர்கள், திருப்பத்தூர் வட்டாட்சியர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை