
தமிழ்நாட்டில் இன்று 938 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,000ஐக் கடந்தது
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.
சென்னையில் இதுவரையிலான பாதிப்பு 13,980ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. அதே நேரம், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 687 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர்! இதை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,000ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160ஆக உயர்ந்துள்ளது.
பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 79 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. குவைத்திலிருந்து விமானத்தில் வந்த 3 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது!
மேற்குவங்கத்திலிருந்து வந்த 12 பேர், குஜராத்திலிருந்து வந்த 6 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டது. மராட்டியத்திலிருந்து ரயில் மூலம் வந்தவர்களில் 39 பேருக்கு தொற்று உறுதி ஆனது. சண்டிகர், தில்லி, குஜராத், கர்நாடகாவிலிருந்து விமானத்தில் வந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டது.

சென்னையை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 94 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் படுமோசமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இன்று, திருவள்ளூரில் 28 பேர், காஞ்சிபுரத்தில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டது.
அடுத்து சேலம் மாவட்டத்தில் இன்று 36 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப் பட்டது.