
மதுரை: திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் முருகனுக்கு நடந்த வைகாசி விசாக பாலாபிஷேகம் நடைபெற்றது. இந்த பாலபிஷேக நிகழ்ச்சியில், பக்தர்கள் இன்றி கோயில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கி,பி ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர் காலத்திய கோயிலாகும். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கோயில்களில் பூஜை மட்டும் நடைபெறுகிறது.

இந்நிலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோவிலிலுள்ள சுப்பிரமணியருக்கு பக்தர்கள் இன்றி கோவில் அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டு பாலாபிஷேகம் செய்வித்தனர்.

- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை