கூட்டுறவு வங்கிகளில் ரூ.56 ஆயிரம் கோடி டெபாசிட்: அமைச்சர் செல்லூர் கே. ராஜூ

சற்றுமுன் மதுரை
sellur raju
sellur raju file picture

மதுரை: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ரூ. 56 கோடி வைப்புத் தொகை உள்ளதாக, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசியது: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் வணிக வங்கிகளுக்கு இணையாக செயல்படுகிறது. கூட்டுறவு வங்கிகளின் நோக்கமே, கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த சிறு, குறு தொழில்களை மேம்படுத்த கடன்கள் வழங்குவதும், விவசாயிகளுக்கு குறித்த காலத்தில் பயிர்க் கடன்கள் வழங்குவதிலும் கூட்டுறவு வங்கிகள் சிறந்து விளங்கி வருகிறது.

ரேசன் கார்டு இருந்தால்  , கூட்டுறவு வங்கிகளில் சிறு தொழில்கள் செய்ய கடன் ரூ. 50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.எந்த ஓரு கூட்டுறவு வங்கியிலாவது, கடன் வழங்க தாமதப்படுத்தினால், என் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.