
ஐராவதநல்லூர் அருகே விரகனூரில் மதன்ராஜ் (வயது 27 ) வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மைனர் சிறுவன் உள்பட 4 பேர் கைது!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தா லுகா ஐராவதநல்லூர் அருகே சாலையின் அருகே அமர்ந்திருந்த மதன்ராஜ் என்பவரை ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத ஆறு நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
கொலை சம்பவம் குறித்து தகவறிந்து வந்த சிலைமான் போலிஸார் மதன் ராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மதன் ராஜ் பெயிண்டிங் வேலை செய்து வருவதாகவும் . அவருடன் வேலை செய்பவர் மனைவிய யுடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் இந்த கொலை நடந்துருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர் .
மேலும் கொலையாளிகள் ஆட்டோவில் ஆறு பேர் வந்துள்ளனர் என்பதையடுத்து சிலைமான் போலீஸார் தனி படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் சிலாபம் பொலிஸார் சிலைமான் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து போலீசாரும் மறைவிடத்தில் இருந்த நான்கு பேரை கைது செய்தனர்
இதில் சின்னத்தம்பி மகன் தவராஜா (வயசு 35 ) இதே பகுதியை சேர்ந்த மற்ற இருவர் கண்ணன் மகன் ராமர் மகன் கண்ணன் Cவயது 22) ராஜா மகன் ராம்பிரகாஷ் ( வயது 17) மற்றும் கோழிமேடு பகுதியை சேர்ந்த கருப்பன் மகன் சதீஷ் கண்ணன் (வயது 30) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் ராம் பிரகாஷ் மட்டும் மைனர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் கொலை தொடர்பாக சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை



