
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் கரூரில் சார்வரி வருட பஞ்சாங்கம் வெளியிடும் நிகழ்ச்சி ! கொரோனா வைரஸ் தொற்று வியாதியை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடாமல் ஜூன் 06 சனிக்கிழமை நேற்று வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) கரூர் மாவட்ட சார்பில் மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் இந்த ஆண்டிற்கான சார்வரி தமிழ் வருட பஞ்சாங்க வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் பஞ்சாங்கத்தின் முதல் பிரதியை வெளியிட,, செயற்குழு உறுப்பினர் ஆடிட்டர் மகாதேவன் மற்றும் மாவட்ட ஆலோசகர் ஸ்டேட் பாங்க் வீரமணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

எப்பொழுதுமே தமிழ் வருடம் சித்திரை 1 ஆனது ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடும் நிலையில், தற்போது கொரோனா தொற்று வைரஸ் கட்டுப்படுத்தும் பொருட்டு நாடெங்கும் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு காரணமாக இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டு தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்), கரூர் மாவட்ட கிளை சார்பில் இன்று நடைபெற்றது.
கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் இல்லத்தில், அரசு அறிவித்த குறைந்த நபர்கள் மட்டுமே கலந்து கொண்டு மற்றும் சமூக இடைவெளி பின்பற்றி, அரசு உத்தரவை மதித்து பிராமணர் சங்கத்தினர் பஞ்சாங்கத்தை வெளியிட்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் காந்திகிராமம் கிளைத் தலைவர் வெங்கடேசன், ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் வி.ராஜா, மாவட்ட துணை தலைவர் வாங்கல் வினோத், வாங்கல் கிளைத் தலைவர் லட்சுமி நாராயணன், வெங்கமேடு கிளையின் தலைவர் ரமேஷ், தாந்தோன்றிமலை தலைவர் வசந்தா பாலசுப்ரமணியன், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் சாரதா ராஜசேகரன், பஞ்சமாதேவி ஹேமா, கரூர் நகர தலைவர் நரசிம்மன், எல் என் எஸ் கிளை தலைவர் எஸ்.பாஸ்கர், தமிழ்நாடு பிராமணர் சங்கம் ( தாம்ப்ராஸ் ) கரூர் மாவட்ட கிளையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெ டெக்ஸ் டாக்டர் சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்களது பாரம்பரிய முறைப்படி இந்த வருடம் ஆன சார்வரி வருட பஞ்சாங்கத்தினை வெளியிட்டனர்.
இதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் தெரிவிக்கும் போது தற்போது, கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பொது மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு பிராமணர் சங்கம் கரூர் மாவட்டம் சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட தாகவும் முகக் கவசங்கள் மற்றும் சானிட்டரி திரவங்கள் ஏராளமானவர்களுக்கு கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இந்த நோய் தொற்றினால் ஆங்காங்கே அன்றாட வாழ்க்கையை இழந்த சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக அரிசி மற்றும் மளிகை சாமான்கள் இலவசமாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த பிராமணர் சமூகத்தினை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகைகள், ஐந்தாண்டு காலமாக தொடர்ச்சியாக, வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார். இதற்கான முழு ஏற்பாடுகளை தமிழ்நாடு பிராமணர் சங்கம் தாம்ராஸ் கரூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்