
மதுரையில் ஆட்சியர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டதை அடுத்து ஆட்சியர் அலுவலகம் மூடப் பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியபட்டதால், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதன்கிழமை மூடப்பட்டு, அலுவலகம் முழுவதும் முகக் கவசம் அணிந்த ஊழியர்கள் பலர் கிருமிநாசினி தெளித்து வருகின்றனராம்.
மேலும் பரவாமல் தடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றி முன் எச்சரிக்கை எடுக்கும் பணியும் நடந்து வருகிறது.

இதனிடையில், தமிழ்நாடு மேடை மெல்லிசை சங்கத்தினர் நிகழ்ச்சி நடத்த கோரிக்கை விடுத்தனர்.
மதுரையில், புதன்கிழமை காலை தமிழ்நாடு மேடையில் பாடும் மெல்லிசை சங்கத்தினர், தாங்களும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும், கடந்த சில மாதங்களாக கொரோனா காலத்தில் தங்கள் வாழ்வதாரம் கடுமையாக பாதிப்பதாகவும், நிகழ்ச்சிகளை நடத்த அரசு அனுமதி தரக்கோரி, அச் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை