பேச்சை நிறுத்தியதால் காதலியின் மூச்சை நிறுத்திய கள்ளக் காதலன்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை
wrong love

சென்னை வண்டலூர் அடுத்த உள்ள புது பெருங்குளத்தூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி யசோதா ராணி அதே பகுதியில் டெய்லர் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக சேலையூர் கணபதிபுரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும், யசோதா ராணிக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பது தெரிய வந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் யசோதா ராணி தனது கடையில் இருந்த போது அங்கு வந்த செல்வகுமார் யசோதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபத்தில் அந்த நபர் கத்தரிக்கோலை எடுத்து யசோதா ராணியின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். யசோதா ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் இருந்த யசோதாவை கண்டு அந்த பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார், யசோதா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் CCTV காட்சிகளை வைத்து பார்த்ததில் செல்வகுமார் தான் கொலை செய்துவிட்டார் என தெரிவியவந்தது. தப்பியோடிய செல்வகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது, தன்னுடனான தொடர்பை யசோதா ராணி திடீரென துண்டித்து பேசாமல் இருந்ததால் தான் அவரை கொலை செய்தேன் என்று விசரணையில் தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் கள்ள காதலியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.