ஏழைகளுக்கான 10 சத இடஒதுக்கீட்டில் வேட்டு வைக்கும் எடப்பாடி அரசு! வலுக்கும் கண்டனங்கள்!

Published:

edappadi palanisamy
edappadi palanisamy

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வருமானம் மற்றும் சொத்து சான்று வழங்க வேண்டாம் என்று தமிழக அரசு திடீரென அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை  இந்து தமிழர் கட்சியின் சார்பில் வன்மையான கண்டிக்கிறோம்.

மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. ஆனால் மத்திய அரசு வேலைவாய்ப்பு பணிகளில் இவை அமல்படுத்தப் பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான வருமானம் மற்றும் சொத்து சான்று பெரும்பான்மையான மாநிலங்களில் வழங்கப்பட்டது. கடந்த 04.06.2020  அன்று தமிழக அரசு சார்பில் இதற்கான சுற்றறிக்கை வந்தது.

அதனைத் தொடர்ந்து எவ்வாறு இதற்கான சான்று வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில்  22 11 2019 , 17 12 2019 சான்று வழங்கும் வழிமுறைகள் வெளியிடப்பட்டது.  இதனடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான சான்றிதழை அதிகமானோர் பெற்று வந்தனர். 

இந்த சான்று மூலம் மருத்துவக் கல்லூரி சீட் ஒருவருக்கு கிடைத்திருப்பதாகவும், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு சிலருக்கு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

இந்த நிலையில் தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் தமிழ்நாடு இ கவர்ணன்ஸ் ஏஜன்ஸி கமிஷனர் சென்னை ஆகியோருக்கு அனுப்பிய அவசர கடிதம் எண் :RA 5(3)/40521/2017, dated 04.06.2020 

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வருமானம் மற்றும் சொத்து சான்று இனிமேல், மேனுவல் , ஆன்லைன் மூலமாகவோ தாசில்தார்கள் வழங்க வேண்டாமென உத்தரவிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த சான்று பெறலாம் என்ற கனவில் இருந்த ஏழை எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்

மத்திய அரசு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக  10 % இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. தமிழக அரசு இதுவரை அதை செயல்படுத்த முனையவில்லை….மத்திய அரசு பணிகளில் இந்த 10 % இட ஒதுக்கீட்டை  பெற வேண்டுபவர்கள் தங்களின் வருமானம் மற்றும் சொத்து குறித்த சான்றிதழை தங்கள் பகுதி தாசில்தாரிடம் விண்ணப்பித்து  பெற வேண்டும்…

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

ஆனால் தற்போது தமிழக அரசு அனைத்து தாசில்தாருக்கும் இந்த சான்றிதழை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது… மாநில அரசு வேண்டுமென்றால் 10 % இட ஒதுக்கீட்டு விஷயத்தில் முடிவெடுக்காமல் இருந்திருக்கலாம்….ஆனால் மத்திய அரசு பணிகளில் இந்த இடஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது…

இதன் பலனைப் பெறுவதற்கு அந்த நபர் வருமான மற்றும் சொத்து சான்றிதழை தாசில்தாரிடம் பெற்று மத்திய அரசின் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்…. மாநில அரசின் முடிவின் காரணமாக தற்போது இது சாத்தியமில்லாமல் போகிறது… மாநில அரசின் இந்த முடிவு நாடாளுமன்றத்தின் முடிவையே கேள்விக்குறியாக்குகின்றது….

மாநில அரசு தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். உரியவர்களுக்கு உரிய சலுகை கிடைக்க கிடைக்கப்பட்ட அரசு வேலைகளில் சேர்ந்திட உரியவர்களுக்கு தமிழக அரசு தேவையான சான்றிதழ்கள் வழங்கி உதவிட வேண்டும் என்றும் இந்து தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். என்று அக்கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இது போல், பாஜக.,வின் கே.டி.ராகவன் தமது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து பதிவு செய்துள்ளார்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Related articles

Recent articles

spot_img