பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்!

சற்றுமுன் சினி நியூஸ் சென்னை
kannan cameraman
kannan cameraman

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார். அவருக்கு வயது 69.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் ‘நிழல்கள்’ தொடங்கி ‘பொம்மலாட்டம்’ வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன்.

பாரதிராஜாவுக்கு மிக நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது பலன் அளிக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் பிற்பகல் 2 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.