April 30, 2025, 10:26 PM
30.5 C
Chennai

எதிர்க்கட்சித் தலைவர் அரசுக்கு நல்ல ஆலோசனையை சொல்ல வேண்டும்: செல்லூர் ராஜூ

sellur raju
sellur raju மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட 35, 36, 51 ஆகிய வார்டு பகுதிகளில் மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கிய போது…

மதுரை : மக்களுக்கு அறிவுரை சொல்லலாம். ஆனால் ஸ்டாலின் முதல்வர் மீது தொடர் குற்றசாட்டுகளையே கூறி வருகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மதுரை அனுப்பானடியில் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு இலவச அரிசி,காய்கறி, பலசரக்கு,சத்து மாத்திரைகள்,கப சுர குடிநீர் முதலானவற்றை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக போல ஒன்றிணைவோம் வா என மக்களிடம் தொழிலதிபர்களிடம் வசூல் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கவில்லை. எதிர்க்கட்சித்தலைவர் அரசுக்கு நல்ல ஆலோசனையை சொல்ல வேண்டும். மக்களுக்கு அறிவுரை சொல்லலாம். ஆனால் ஸ்டாலின் முதல்வர் மீது தொடர் குற்றசாட்டாக கூறி வருகிறார்.

துணைமுதல்வர் மேயராக இருந்துள்ளார் ஸ்டாலின். முதல்வர் தான் எல்லா துறைகளுக்கும் தலைமை. அவர் அனுமதி இல்லாமல் எந்த துறையிலும் அணுவும் அசையாது.

பாஜக தலைவர் ஜெ.பி நட்டா கருத்துக்கு ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். திமுக பொறுத்தவரை நிறம் மாறக்கூடிய கட்சி. ஒரு விலங்கை போல நிறம் மாறக்கூடியவர்கள். திமுகவுக்கு நிரந்தர கொள்கை கிடையாது. ராகுல் பிரதமராக வருவார் எனக்கூறி கடைசியில் காங்கிரஸ் தோற்றது தான் மிச்சம்.

ALSO READ:  தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

பிரதமர் வீட்டிற்கு வருகிறார் என்றவுடன் வெளிநாடு சென்ற ஸ்டாலின் பிரதமரை வரவேற்க ஓடோடி வந்தார். பின்னாளில் அவரை மிக மோசமாக விமர்சித்தார்.

முதல்வர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் மீது ஆர்எஸ் பாரதி வழக்கு போட்டுள்ளார். திமுக ஆக்கப்பூர்வமான பணிகளை செய்வதில்லை. வழக்குப் போட்டால் பத்திரிக்கையில் வரும் என்பதால் வழக்கு போடுகிறார்கள்.

சாமானிய முதல்வர் மக்கள் முதல்வராக எடப்பாடியார் உள்ளார் என பொதுமக்கள் நினைக்கிறார்கள்.

அதிமுக எம்எல்ஏவுக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக கவனமோடு இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்.

சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் நிகழும் என அமமுகவினர் கூறுவது… அவர்களுடைய நம்பிக்கையை சொல்கிறார்கள். அடுத்த வேலையை நோக்கி அதிமுக சென்று கொண்டுள்ளோம். தற்போதைக்கு மக்களை கொரானா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என உழைத்து கொண்டுள்ளோம் என்றார்.

  • ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

Topics

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories