
மதுரை அருகே பரவை காய்கறி மார்க்கெட்டை, செவ்வாய்க்கிழமை வருவாய்த் துறை ஆய்வு செய்தனர்.
கொரோனா தொற்றானது, பரவை மார்க்கெட் வியாபாரிகளுக்கு தென்பட்டதால், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவின் பேரில் மார்க்கெட்டுக்கு, மதுரை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வடக்கு தாசில்தார் கடைகளை அடைத்து சீல் வைத்தனர்.
இவைதவிர, பரவை காய்கறி மார்க்கெட் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
பரவை மார்க்கெட் கடை உரிமையாளர்களுக்கு பரிசோதனை செய்ய, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பரவை மொத்த காய்கறி வியாபாரி சங்கமானது, அனைவருக்கும் கபசூரகுடிநீர், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- ரவிச்சந்திரன், மதுரை