குடிபோதையில் பெண் காவலரிடம் வம்பு! திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

சற்றுமுன் தமிழகம்
dmk prob

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் அடைக்கலமணி. திமுக ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் நேற்றிரவு காரில் வந்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்திருக்கிறார். வளையப்பட்டி ஐந்தாம் நம்பர் ரோட்டில் போலீசார் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த நேரம் பார்த்து அடைக்கலமணி கார் வரவும், அதனையும் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அந்த சோதனையில் போக்குவரத்து பெண் காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரியும் இருந்தார். தன்னை சோதனையிடுவதை விரும்பாத அடைக்கலமணி மேரியை அசிங்கமாக பேசினார். தகராறு செய்தார். சோதனை செய்யவிடாமல் அவரை தடுத்துள்ளார். மேலும் தண்ணி அடித்திருந்ததால் போதையில் அநாகரீகமாகவும் நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மதுபோதையில் கார் ஓட்டியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, மதுபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார், திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.