
இந்தியா சீனா எல்லையில் நடந்த மோதலில் தெலங்காணா சூர்யாபேட்டையைச் சேர்ந்த கர்னல் பிக்குமல்ல சந்தோஷ் பாபு வீரமரணமடைந்தது குறித்து தெலங்காணா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் தீவிரமான அதிர்ச்சியை தெரிவித்தார்.
நாட்டுக்காக தெலங்காணா மகன் உயிர் தியாகம் செய்துள்ளான் என்றும் அந்தத் தியாகம் விலை மதிப்பில்லாதது என்றும் முதலமைச்சர் கேசிஆர் கூறினார்.
சந்தோஷின் பெற்றோர் மனைவி குழந்தைகள் பிற குடும்ப அங்கத்தினர்களுக்கு முதல்வர் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு அரசாங்கம் அனைத்து விதத்திலும் உதவியாக இருக்கும் என்று கூறினார். சந்தோஷ் உடலை ரிசீவ் செய்வதிலிருந்து அந்திமக்கிரியை வரை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தெலங்காணா மாநில அரசாங்கத்தின் பிரதிநிதியாக பங்குபெற வேண்டும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வர ரெட்டியை முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கு எல்லையில் இந்தியா-சீனா இடையே நடந்த சண்டையில் இந்திய படையைச் சேர்ந்த கர்னல் அதிகாரி சந்தோஷோடு கூட இரு சிப்பாய்கள் மரணமடைந்தார்கள்.
திங்களன்று இரவு நடந்த இரு நாட்டு படைவீரர்களின் மோதலில் சூர்யாபேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் பாபு அமரரானார்.

மூன்று மாதங்கள் முன்பே ஹைதராபாத்திற்கு மாற்றம் பெற்றார். லாக்டௌன் காரணமாக அவர் இந்திய சைனா எல்லையிலேயே இருக்கும்படி ஆயிற்று. அவருக்கு மனைவி சந்தோஷி, மகள் அபிக்ஞா (9), மகன் அனிருத்(4) உள்ளார்கள். இவர்கள் அனைவரும் டெல்லியிலேயே உள்ளார்கள். சந்தோஷ் மரணச்செய்தி கேட்டு அவர் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
எனக்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது வருத்தமாக உள்ளது என்று சந்தோஷின் தாய் மஞ்சுளா தெரிவிக்கிறார். கண்ணீரோடு அவர் கூறிய வார்த்தைகள் இவை. என் மகன் தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்துள்ளான் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் என் மகனின் மரணத்தை நினைத்து என் மனம் அழுகிறது. அவன் எனக்கு ஒரே மகன் என்று கூறுகிறார்.

சந்தோஷ் மரணம் குறித்து பல பிரமுகர்கள் அனுதாபம் கூறிவருகிறார்கள்.தெலங்காணா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை மாலை சந்தோஷ் பாபு உடலை சூர்யா பேட்டைக்கு எடுத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.