
கோவையை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் சிக்கன் கடை வைத்துள்ளார். இவருக்கு வயது 37. கல்யாணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் பத்மநாபன் குணம் சரியில்லை. அதனால் அவருடன் குடும்பம் நடத்த முடியாததால், அவரது மனைவி குழந்தைகளையும் அழைத்து கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார்.
அப்போதுதான் பத்மநாபனுக்கு திலகாவுடன் பழக்கம் ஏற்பட்டது. திலகாவுக்கு 33 வயது. இவரும் கல்யாணம் ஆகி, கணவரை பிரிந்தவர். மனைவியை பிரிந்தவரும், கணவனை பிரிந்தவரும் ஆறுதல் தேடிக் கொண்டனர். 2 பேர் வீட்டிலும் ஆள் இல்லாத நேரங்களில் தனிமையில் உறவில் இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி திலகாவை கேட்டுள்ளார் பத்மநாபன். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. கல்யாண விஷயம் சம்பந்தமாகவே 2 பேருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இவர்கள் தகராறு செய்வதை பார்த்து தான் இரு வீட்டுக்கும் விஷயமே தெரியவந்தது. அதனால் கள்ளக் காதலர்களை கண்டித்தனர். 2 பேரும் சந்திக்க கூடாது என்று கண்டிஷனும் போட்டனர். அவரவர் குடும்பத்தை பாருங்கள், குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள் என்று அட்வைஸ் தந்தனர். இருப்பினும் உறவு தொடர்ந்தது.
காளப்பட்டி ரோட்டில் இருக்கும் ஒரு ரூமில்தான் பத்மநாபன் நண்பர்களுடன் கேரம்போர்டு விளையாடுவாராம். அந்த ரூமில்தான் கள்ளக்காதலர்கள் இருவரும் சந்தித்து தனிமையையும் பகிர்ந்து கொள்வார்களாம். அப்படித்தான் சம்பவத்தன்றும் திலகவதி அந்த ரூமுக்கு வந்துள்ளார். வழக்கம்போல் கல்யாண பேச்சு எழுந்துள்ளது. திலகாவும் மறுத்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பத்மநாபன், கீழே கிடந்த சம்மட்டியை எடுத்து திலகாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்துவிட்டார். இதை பார்த்து பயந்துபோன பத்மநாபன், அதே ரூமிலேயே வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த பீளமேடு போலீசார் அந்த ரூமில் கிடந்த 2 சடலத்தையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையும் நடக்கிறது.