
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழக முதல்வர் பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனிச்செயலாளர் தாமோதரன் உயிரிழந்துள்ளார்.
சென்னையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனிச்செயலாளர் உடன் இருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.