
வீர வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) சார்பில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்றைய திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த வீரவாஞ்சிநாதன் ஆங்கிலேய காலத்தின் கலெக்டர் ஆஷ் துரையை பிரிட்டிஷ் கால ஆட்சியில் சுட்டுக்கொன்ற தினமான ஜூன் 17ஆம் நாள் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை அன்றைய ஆங்கிலேய அரசு அடக்குமுறையால் ஒடுக்கியும் அடக்கியும் வந்தது.
இதை எதிர்த்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட திட்டமிட்ட வீரர்களில் வீரவாஞ்சிநாதன் ஒருவர். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக போராடிய பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரமும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க கோரி நடத்தப்பட்ட போராட்டத்தை அடக்க அப்போதைய பிரிட்டிஷ் காலத்தில் நெல்லை சப் கலெக்டர் ஆஷ் துரை துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்
இதனால் வெகுண்ட வாஞ்சிநாதன், சாவடி அருணாச்சலம் பிள்ளை சேர்ந்து ஆஷ் துரையைச் சுட்டுக் கொல்லத் திட்டமிட்டனர் அதன்படி, 1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி, நெல்லை கலெக்டர் ஆஷ்துரை குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல புறப்பட்ட அவரையும் அவரது மனைவியையும் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து வீரவாஞ்சி சுட்டுக் கொன்றார். பின்னர் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொன்று களமரணம் அடைந்தார்.

இதனையடுத்து 110 வது ஆண்டாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் தலைமையில், அவரது இல்லத்தில் வீரவாஞ்சிநாதன் திருவுருவப் படத்திற்கு சந்தன மாலை மற்றும் மலர் மாலை அணிவித்து மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் கரூர் மாவட்ட நிர்வாகிகள் செய்தி மக்கள் தொடர்பு துறை ஜெடெக்ஸ் டாக்டர் சிவக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேசன், ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா, வெண்ணமலை ரமேஷ், காந்திகிராமம் சங்கரநாராயணன், மகளிர் அணி நிர்வாகிகள் ஸ்ரீதேவி அலமேலு ஆகியோர் உள்ளிட்டோர் பங்கேற்ற சுதந்திரத்திற்காக போராடிய வீர வாஞ்சி நாதனுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
இதற்கான முழு ஏற்பாடுகளை தமிழ்நாடு பிராமணர் சங்கம் கரூர் மாவட்ட சிறப்பாக செய்திருந்தது