
எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக இராணுவ வீரருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, தமிழகத்தில் பல இடங்களில் இந்து முன்னணி சார்பில் நடத்தப் பட்டது.
சென்னையில் இந்து முன்னணி நிறுவுனர் தலைவர் ராம.கோபாலன் கலந்து கொள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இது போல், தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இந்து முன்னணி சார்பாக சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுதி மொழி எடுத்தனர். இதில் சதீஸ்குமார் மாவட்ட செயலாளர், மாணிக்கமூர்த்தி மாவட்ட துணை தலைவர், ஜெய்கணேஷ் , சக்தி சரண் குமார் , சுரேஷ் , சபரி ராஜா மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனார்.

எல்லையில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தென்காசி நகரில் நடைபெற்றது தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவா தென்காசி நகர தலைவர் இசக்கிமுத்து நகர பொதுச் செயலாளர் நாராயணன் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சூர்யா மாரி, செல்வம் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இது போல், கன்னியாகுமரியிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பாக குமரிமுனையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.