பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் 100 பெண்களை காதலிப்பது போல் ஏமாற்றி அவர்களிடம் இருந்து நகை, பணம் மற்றும் அவர்களது கர்ப்பையும் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 28 வயதான சதாக் முஷ்தக் என்ற இளைஞர் பல பெண்களிடம் தான் உயர் பதவி ஒன்றில் இருப்பது போல நடித்து அவர்களை மயக்கி தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி காதலிப்பது போல் நாடகமாடி வந்துள்ளார். அவர்களது கற்பையும் சூறையாடிவிட்டு அவசர தேவைக்கு பணம் தேவைப்படுகிறது என கூறி அவர்களிடம் இருந்து பணம், நகை உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டு மாயமாகி வந்துள்ளர் சதாக் முஷ்தாக். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் சதாக் முஷ்தக் மீது புகார் கொடுக்க முன்வராத நிலையில் தற்போது ஒரு இளம்பெண் சதாக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை வைத்து சதாக் முஷ்தக்கை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சதக் 75 முதல் 100 பெண்களிடம் இதுபோல் காதலித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை அபகரித்து செல்லும் இந்த செயலை சதக் கடந்த 2007-ஆம் ஆண்டு முதலே செய்து வந்துள்ளான். அதாவது தனது 18 வயது முதலே இதனை ஆரம்பித்துள்ளான் சதாக் முஷ்தக்
இது ஹை லெவல் லவ்ஜிஹாத்: 100 பெண்களை கைவைத்த இளைஞர்!
Popular Categories




