இன்றைய பரபரப்பு செய்திகள் 29/06/17
***
தமிழகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் : மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அமெரிக்காவில் நுழைய 6 இஸ்லாமிய நாட்டினருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
குளம் தூர்வாரும் பணியை தமிழக அரசு தான் தொடங்கியதாக முதலமைச்சர் விளம்பரம் தேடுகிறார்.குளங்களில் தூர்வாரும் பணியை தொடங்கியது திமுக தான் : முக. ஸ்டாலின்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம் : நசீம் ஜைதி.
தினகரன் – பழனிசாமி இடையே பிரிவு கிடையாது; கருத்து வேறுபாடு இருந்தாலும் அதுவும் விரைவில் விலகும்.ஆகஸ்ட் 5க்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் – புகழேந்தி.
மருத்துவப்படிப்பில் மாநில மாணவர்களுக்கு 85% ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு.தமிழக அரசும், எம்சிஐயும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
குட்கா விவகாரத்தில் முதலமைச்சரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய தொழில்பேட்டைகள் அமைக்கப்படும். மாவா, குட்கா விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது : முதலமைச்சர் பழனிசாமி.
குட்கா விவகாரத்தில் முதலமைச்சர் விளக்கத்தை பூசி முழுகியுள்ளார்;குட்கா விசாரணை நாடகமாகநடந்து வருகிறது : ஸ்டாலின்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க இண்டிகோ ஏர்லைன்ஸ் முடிவு.
காவல்துறை எங்கள் மீது போட்டுள்ள பொய் வழக்கை முறியடிப்போம் : திருமுருகன் காந்தி.
நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான மூல வாக்கு ஜூலை 11 ஆம் தேதி விசாரிக்கப்படும்: உயர்நீதிமன்றம்.
திருமணம் நடந்து 150 நாட்களுக்குப் பிறகும் திருமணத்தை பதிவு செய்து கொள்வதற்கு வழிவகை செய்ய சட்டத்திருத்தம் பேரவையில் தாக்கல்.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு;1-வது நிலையின் 1-வது பிரிவில் பராமரிப்பு பணியால் மின்உற்பத்தி நிறுத்தம்.
ஜம்மு – காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.
நாகேஷ் திரையரங்கம்” என்ற தலைப்பில் படம் வெளியிட தடை விதிக்க கோரி நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
செக் மோசடி வழக்கில் காங். முன்னாள் எம்.பிக்கான தண்டனை நிறுத்திவைப்பு.முன்னாள் எம்.பி அன்பரசு கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்றம் நடவடிக்கை.
அஹிம்சையை உலகிற்கு போதித்த தேசம் இந்தியா; 16 வயது ஜூனைக் கான் என்ற சிறுவன் அடித்துக்கொல்லப்பட்ட சூழலில் பிரதமர் பேச்சு.
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர். அருப்புகோட்டையில் மீட்கப்பட்ட சிலை விற்கப்பட்ட வழக்கில் ஆஜரானார்.
சிலை விவகாரத்தில் சிக்கிய டிஎஸ்பி காதர் பாஷா சஸ்பெண்ட்.உயர்நீதிமன்றத்தில் விசாரணையின் போது தமிழக அரசு வழக்கறிஞர் தகவல்.
ஜம்மு-காஷ்மீரில் 5 கிலோ எடையுள்ள இரண்டு ஐஇடி வெடிகுண்டு பறிமுதல்.
அமர்நாத் யாத்திரையின் முதல் குழு பயணம் தொடங்கியது.
நாளை நடைபெறும் ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தை புறக்கணிக்கிறது திமுக.
புதிய 200 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி. சில்லறை தட்டுப்பாடு எதிரொலி.
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது தூண்டுதல் அறிக்கை வெளியிட்ட இருவருக்கு பிடிவாரண்ட்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்றுள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு – பெரியகள்ளிப்பட்டியில் துணைமின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 11 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்ப்பட்டுள்ளததாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருடன் ஆலோசனை என சென்னையில் பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
வரலாறு தெரியாத கலைராஜன் என்னை டிடிவி நியமித்ததாக தவறான தகவலை பரப்பி வருகிறார் : கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழி.
1999 இல் கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக ஜெயலலிதா என்னை நியமித்தார். என்னை நியமித்து ஓராண்டுக்குப் பிறகு டிடிவி தினகரன் கட்சிப்பதவிக்கு வந்தார் : அருண்மொழி.
திருச்சி விமானநிலையத்தில் கடத்திவரப்பட்ட ₹40லட்சம் மதிப்புள்ள 1.6கிலோ தங்கம் பறிமுதல் :
சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை.
கோவை குற்றாலம் அருவியில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு. 3 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு.
சென்னை : வரி ஏய்ப்பு செய்ததாக செய்யது பீடி நிறுவனத்தில் 2-வது நாளாக வருமானத்துறையினர் நடத்தி வருகின்றனர்.
திருச்சி : மணப்பாறையில் பழைய இரும்புக் கடையில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்.
கடலூர் : ரெட்டிச்சாவடி அருகே கரிக்கல்நகரில் வைரஸ்காய்ச்சலால் 100பேர் பாதிப்பு. குடியிருப்புப்பகுதியில் கழிவுகள் கலப்பதால் நோய் பரவுவதாகப் புகார்.
செய்யது பீடி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ரூ. 3 கோடி பறிமுதல்.
பிரபல ஆன்மீக பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்* சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான ஜெயலட்சுமிக்கு வயது 85 ஆகும்.
ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் புதிய பதிப்பில் 240 இந்திய வார்த்தைகள் இடம்பிடித்துள்ளன ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் 9வது பதிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
எண்ணூர் துறைமுகத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம்.
மலேசியா கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்து விட்டு மீண்டும் மலேசியாவிற்கு செல்ல வேண்டிய மலிண்டோ ஏர் லைன்ஸ் விமானம் தொழில் நுட்ப கோளாரின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் 152 பயணிகள் தவிப்பு. கோலாலம்பூரில் இருந்து பிறநாடு களுக்கு , வேறு விமானங்களில் செல்ல வேண்டிய நான்கு பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் தர்ணா போராட்டம்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு எதிர்ப்பு தெரிவித்து தீப்பெட்டி ஆலைகள் ஜூலை 1முதல் மூடல் – தொடர் போராட்டம் நடத்த உற்பத்தியாளர்கள் முடிவு.
ஜிஎஸ்டியை காரணம் காட்டி தியேட்டரில் சினிமா கட்டணம் உயர்வு என புகார்.தியேட்டர் அதிபர்கள் மீது நடவடிக்கை கோரி கமிஷ்னர் அலுவலகத்தில் மனு.
ஜிஎஸ்டி வரிச்சட்டத்தில் வரிவிகிதங்கள் மற்றும் சட்ட விதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும்: வணிகர் சங்க பேரமைப்பு.
புதிய டிஜிபியை தேர்வு செய்வது குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை. டெல்லியில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவருடன் ஆலோசனை.
கடலூர்: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை; செல்வம் என்பவருக்கு 10 ஆண்டு சிறை வழங்கியது கடலூர் மகளிர் நீதிமன்றம்.
தேனி: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் இருந்து 15 கன அடி நீர் திறப்பு.
பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் சிவி சண்முகம்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நிழலாக திகழ்ந்தவர் சசிகலா – சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் புகழாரம்.
இரட்டை இலை சின்னத்தை மீண்டும் மீட்போம் – ஓ.எஸ். மணியன்.
பாலில் கலப்படம் உள்ளதாக நாங்கள் தான் நிரூபித்துள்ளோம் – பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை விமான நிலையத்தில் பேட்டி.
எந்த பாலில் கலப்படம் உள்ளது என்பதில் மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர்.பால் நிறுவனங்களிடம் பணம் கேட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை – ராஜேந்திர பாலாஜி.
தேசிய கைத்தறி தினம் ரூ.1.5 கோடி செலவில் கொண்டாடப்படும் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
டிடிவி தினகரன் மீதான அந்திய செலாவணி மோசடி வழக்கு ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
காவிரியில் இருந்து தண்ணீர் கேட்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது : நடிகர் விஷால்.
நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கு : திலீப்பிடம் 12 நேரம் போலீசார் விசாரணை.
ஆந்திராவில் செம்மரம் கடத்திய ஊர்க்காவல்படை வீரர் உட்பட 5 பேர் கைது.
இந்தியாவிலேயே முதல் முறையாக வாலிபரின் மூச்சு குழாயில் பிளேடு துண்டுகள் அகற்றம் : ஸ்டான்லி டாக்டர்கள் சாதனை.
ஈரோடு : சித்தோடு அருகே பாட்டி பாவாயி , தந்தை பழனிசாமியை சுட்டுக்கொன்ற சந்தோஷ்குமார் காவல் நிலையத்தில் சரண்.
வாட்டிகன் நிதி அமைசர் ஜார்ஜ் பெல் மீது ஆஸி போலீஸார் பாலியல் வழக்கு பதிவு : நேரில் ஆஜராக சம்மன்.
கடலூர் : கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட திரைப்பட நடிகர் சிவமணி கைது.
திருவண்ணாமலை: செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் கையாடல் புகாரில் வரித் தண்டலர் சஸ்பெண்ட்.
குட்கா விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் : அமைச்சர் விஜயபாஸ்கர்.
குட்கா விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மேல் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
எனக்கு மடியில் கனமில்லை; எனவே வழியில் பயமில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஐ சிறுமைபடுத்தி பேசிய திண்டுக்கல் சீனிவாசனை எம்ஜிஆர் கட்சியின் அமைச்சர் பதவியில் இருந்து விலகி விடு தமிழக முதல்வரே உடனடியாக நடவடிக்கை எடு என்று திண்டுக்கல் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.




