ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும்: இந்து மகாசபா!

Published:

03 Sep21  Sterlite copper
03 Sep21 Sterlite copper

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா கரூர் மாவட்ட தலைவர் மாயனூர் ராஜவேல் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

இன்று அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் திரு. கல்கி K. ராஜசேகர் அவர்களின் வழிகாட்டுதல் படி கரூர் மாவட்ட தலைவர் மாயனூர் ராஜவேல் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி பதிவு அஞ்சலில் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.

அந்த மனுவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையானது கடந்த 1996 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இந்தியாவின் தாமிர தேவையில் நாற்பது சதவீதத்தை பூர்த்தி செய்யும் முக்கிய ஆலையாக விளங்கி வந்ததை அனைவரும் அறிவர்.

தாமிரம் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் வேலையில் ஸ்டெர்லைட் ஆலையானது சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சில தேச நலனில் அக்கறையில்லாத அந்நிய சித்தாந்தவாதிகளால் பரப்பப்பட்டு துறைமுக நகரமாம் தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22, 23 தேதிகளில் பெரும் கலவரம் வெடித்து பலர் துப்பாக்கி சூட்டில் இறந்தது குறிப்பிடதக்கது.

மேலும் தூத்துக்குடி கலவரத்தின் பின்னனியில் சில நக்சல் தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக அகில பாரத இந்து மகா சபா கட்சி கருதுகிறது.

abhindumahasabha karur
abhindumahasabha karur

மேலும் இந்தியாவில் இதே தாமிர உற்பத்தி ஆலைகளான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது), ஹின்டால்கோ இண்டஸ்ட்ரிஸ், ஜகாடியா காப்பர் லிமிடெட் போன்ற பிற ஆலைகள் ராஜஸ்தான் மத்திய பிரதேஷ் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் எவ்வித பிரச்சினையுமின்றி இயங்கி வரும் வேலையில் தமிழகத்தில் மட்டும் ஸ்டெர்லைட் ஆலையினை இயங்க விடாமல் செய்வது ஒருதலைபட்சமானது என்றும் சீனா போன்ற இந்திய நாட்டிற்கு எதிரான நாடுகளின் சதி திட்டமாக இருக்கலாம் என்றும் அஞ்ச இடமளிப்பதாகவும் உள்ளது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

மேலும் தற்போது இந்திய அளவில் நாற்பது சதவீத காப்பர் தேவையை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையினை மூடிவிட்டு தற்போது சீனா போன்ற வெளி நாடுகளில் இருந்து தாமிரத்தை அதிக விலைக்கு இறக்குமதி செய்வது இந்திய பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என கூறிக்கொள்கிறோம்.

ஆகவே ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் இயங்க செய்ய ஆவன செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு கூறியிருந்தார்.

Related articles

Recent articles

spot_img