கொரோனா அச்சம்: இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை!

Published:

harisingh
harisingh

புகழ்பெற்ற திருநெல்வேலி டவுன் “இருட்டுக்கடை” அல்வா கடை உரிமையாளர் ஹரிசிங், கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர், இன்று திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது நெல்லை பகுதி மக்களை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருநெல்வேலியின் அடையாளமாக அல்வாவை மாற்றியவர்களில் ஒருவர் ஹரிசிங். இருட்டுக் கடை அல்வா நெல்லை மாநகருக்கு ஓர் அடையாளத்தைத் தந்தது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் ஹரிசிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது நெல்லை மக்களுக்கு அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்திஉள்ளது.

Related articles

Recent articles

spot_img