தென்மண்டல ஐஜி.,யாக முருகன் ஐபிஎஸ் நியமனம்!

சற்றுமுன் தமிழகம் மதுரை
southzone ig murugan
southzone ig murugan

மதுரை: தென்மண்டல புதிய ஐ.ஜி.,யாக டாக்டர் எஸ்.முருகன் ஐபிஎஸ்., நியமிக்கப் பட்டிருக்கிறார். இவர் சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவில் பணியில் இருந்தார்.

தற்போது தென்மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் கே.பி.சண்முகராஜேஸ்வரன் ஐபிஎஸ்., ஜூன் 30 இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக டாக்டர் எஸ்,முருகன் நியமிக்கப் பட்டிருக்கிறார்.

thuthukkudi sp jayakumar
thuthukkudi sp jayakumar

தற்போது பெரும் பிரச்னைக்கு உள்ளாகியிருக்கும் சாத்தான்குளம் விவகாரத்தால், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,யாக இருக்கும் அருண்பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக எஸ்.ஜெயகுமார் நியமிக்கப் பட்டிருக்கிறார். இவர் தற்போது விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக பணியில் இருந்து வருகிறார்.

இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்திருக்கிறார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.