சி.எம்., போன மாசம் தொடங்கி வெச்ச கால்வாய்… உடைப்பு எடுத்து ஊருக்குள் வெள்ளம்!

Published:

kondapochama canal
kondapochama canal

ஊருக்குள் புகுந்த வெள்ளம்: கொண்ட போச்சம்மா சாகர் கால்வாய்க்கு உடைப்பு ஏற்பட்டது. கிராமத்தை மூழ்கடிக்கும் வெள்ளம்.

மே மாத இறுதியில் தெலங்காணா முதல்வர் கேசிஆர் கரங்கள் மீதாக பெருமைக்குரியதாக தொடங்கப்பட்ட கொண்ட போச்சம்மா சாகர் கால்வாய்க்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடாபுரம் கிராமத்தில் வெள்ள நீர் புகுந்தது.

முதல்வர் கேசிஆர் ஒரு மாதம் முன்பு மிகவும் பெருமைக்குரியதாக தொடங்கிய கொண்டபோச்சம்மா சாகர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வெங்கடாபுரம் கிராமத்தில் ஏராளமாக வெள்ள நீர் புகுந்து ஊரை மூழ்கடித்து வருகிறது.

flood water i
flood water i

மழைநாளில் அதிகளவு வெள்ளநீர் சேர்ந்ததால் வெள்ளத்தின் ஓட்டம் அதிகமாக உள்ளது. கிராமத்தில் பல வீடுகளுக்குள் நீர் புகுந்து விட்டது. செவ்வாய் அன்று காலையிலிருந்தே கிராமத்திற்குள் நீர் புகுந்து வருவதால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கிராமத்தார் கவலை அடைந்தனர்.

ஜெகதேவ்பூர், ஆலேரு தொகுதிகளில் உள்ள எம் துருக்கப்பல்லி, பொம்மலராமாரம் மண்டலங்களில் உள்ள குளங்களை நிரப்புவற்தாக கொண்டபோச்சம்மா சாகர் நீரை திறந்துவிட்டார்கள்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

சிஎம் கேசிஆர் ஃபார்ம் ஹவுசுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் கால்வாய்க்கு உடைப்பு ஏற்பட்டது. உடனே எச்சரிக்கை அடைந்த மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் வலப்புற கால்வாய்க்கு நீர் விடுவதை நிறுத்தி வைத்தார்கள். சாகரில் உடைப்பு ஏற்பட்டது என்று அறிந்துகொண்ட உடனே பொருளாதாரத்துறை அமைச்சர் டி ஹரிஷ் ராவு எச்சரிக்கை ஆனார். நீர்வளத் துறை அதிகாரிகளோடு போனில் உரையாடினார். அது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கொண்ட போச்சம்மா சாகரில் இதற்கு முன்பு இரண்டு முறை உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த அளவுக்கு வெள்ளப் பிரவாகம் அதில் இல்லை. ஆனால் தற்போது மிக அதிக அளவில் வெள்ளநீர் வருவதால் வெங்கடாபுரம் கிராமம் மொத்தமும் நீர்மயமாக காட்சியளிக்கிறது.

Gushing Godavari waters invade Venkatapur village following a breach to Kondapochamma canal in erstwhile Medak district in Telangana

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img