தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தான் மிரட்டல்!

இந்தியா சற்றுமுன்
taj hotel

மும்பையின் தாஜ் ஹோட்டல்களுக்கு பாகிஸ்தானிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கராச்சியிலிருந்து திங்கள்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து மும்பையின் இரண்டு தாஜ் ஹோட்டல்களான கொலாபா மற்றும் பாந்த்ரா அருகிலுள்ள பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) தீவிரவாத அமைப்பின் உறுப்பினர் என்று கூறிய ஒருவர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இவ்விரு ஹோட்டல்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2008 நவம்பரில் நடைபெற்றதை போல் தாஜ் ஹோட்டலில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் எனக் கூறிவிட்டு மர்மநபர் தொடர்பைத் துண்டித்துள்ளார். இதையடுத்து தாஜ் ஹோட்டலுக்கு உள்ளேயும் அதன் சுற்றுப்புறங்களிலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2008-ல் தாஜ் ஹோட்டல் உள்பட மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இந்நிலையில் தற்போது விடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பையடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.