தேவதானம்… ஊரடங்கிலும் மணல் கொள்ளை ‘ஜரூர்’! அரசு ‘கொர்’!

Published:

Rajapalayam
File Picture

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் தேவி ஆற்று பகுதியில் ஊரடங்கு காலத்திலும் மணல் கொள்ளை… அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி தென்காசி மாவட்டம் விருதுநகர் மாவட்டம் இணையும் தேவிஆறு ஆற்றுப்பகுதியில் நாள்தோறும் மாலை 5 மணி முதல் அதிகாலை வரை 10க்கும் மேற்ப்பட்ட டிராக்டர்,M80
இரண்டு சக்கர வாகனங்கள், மாட்டு வண்டி முலம் மணல் கொள்ளை தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

மணல் கொள்ளை சம்பந்தமாக காவல்துறை , வருவாய் துறை, பொதுப்பணித் துறை அரசு அலுவலகங்களில் தெரிவித்தும் கூட கண்டும் காணாதது போல் இருந்து
வருகின்றனர் மேலும் இரவு நேரங்களில் மணல் கொள்ளையை தடுக்க வந்தால் எங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என கூறி வருகின்றனர் மேலும் மாவட்ட நிர்வாத்திற்க்கு தகவலும் தெரியபடுத்துவது இல்லை.
.
கடந்த 4 வருடத்துக்கு முன்பு இந்த ஆறு 5அடி ஆழம் இருந்த நிலையில் இன்று நாள் தோறும் அடிக்கும் மணல் கொள்ளையில் அது தரை அளவு தெரிந்தும் கூட விட்டு வைக்க வில்லை.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

கொரனா காலத்தில் மாலை நேரத்தில் யாரும் வெளியே வரக்கூடாது என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது ஆனால் மணல் கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்து உள்ளது.

மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் அதே பகுதியை சேர்ந்த 4 நபர்கள் என்று எல்லா அரசு துறை அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும் நான்கு நபர்கள் நாள் ஒன்றுக்கு 10 டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு 1 டிராக்டர் மணல் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விற்று நல்ல சம்பாதித்து வருகின்றனர் அரசு அதிகாரிகளையும் மனம் குளிர வைக்கினர்

மேலும் இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர் விவாசயம் மட்டுமே நம்பி உள்ளவர்கள் மணல் கொள்ளையால் விவசாயிகள் வாழ்வாதாரம் பதிக்கப்பட்டு வருகிறது

மாவட்ட நிர்வாகம் மணல் கொள்ளையை தடுத்து விவசாயத்தையும் விவசாயிகளையும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

Related articles

Recent articles

spot_img