வெமுலவாடாவில் சிராவண மாத கொண்டாட்டங்கள்! ஆன்லைன் புக்கிங் மூலம் தரிசனம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sriraja-rajeshwara-temple
sriraja-rajeshwara-temple

தெலங்காணாவில் பிரபல புண்ணியத்தலம் வெமுலவாடாவில் சிராவண மாதம் கொண்டாட்டங்களுக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

சிராவண மாதத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் உபவாச தீட்சையோடு பரமசிவனை தரிசிப்பார்கள்.

இந்த மாதம் 21ம் தேதியன்று சிராவண மாதம் தொடங்குவதால் பக்தர்களின் பெருமளவு கூட்டத்தை கணக்கில் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

தற்போது தெலங்காணா முழுவதும் கொரோனா பரவல் இருப்பதால் பக்தர்களின் தரிசனத்திற்கு ஆன்லைன் புக்கிங் வசதி ஏற்பாடு செய்துள்ளார்கள்.

rajarajeswara-temple1
rajarajeswara-temple1

ஆன்லைனில் புக் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். அதன்படி ஒரு மணி நேரத்திற்கு 300 பேர் வீதம் காலை 6.30 முதல் மாலை 5.30 வரை தரிசனம் ஏற்பாடு செய்வதற்கு அரசாங்கம் ஐடி துறைக்கு பரிந்துரை அனுப்பியுள்ளதாக ஆலய குழுவினர் தெரிவித்தனர்.

கொரோனா விஷயத்தில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளும் எடுத்துக் கொண்டுள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பக்தர்களுக்கு முழு அளவில் ஸ்கேனிங் செய்த பிறகே ஆலயத்தில் அனுமதி அளிப்போம் என்று கூறினர்.

ஜுரம் இருமல் ஜலதோஷம் இருப்பவர்களை எந்த நிலையிலும் அனுமதிக்கமாட்டோம் என்று தெளிவுபடுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.