கொரோனா ஆபத்து எப்போ குறையும்?!

உரத்த சிந்தனை கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
corona
corona

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. கொரோனா பரவ தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் சென்னையில் மட்டும் தொற்று அதிகரித்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர், சென்னையில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே பொதுமக்களுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் கொரோனா பெருந்தொற்றாக மாறும் நிலை இனி இருக்காது என புள்ளிவிவரங்கள் அடிப்படையிலான ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜூலை 10 முதல் 14 ஆம் தேதி இடையிலான சென்னை மாநகரில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை சுட்டிகள் கணித அறிவியல் நிறுவனம் புள்ளிவிவரம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பரவல் ஒரு சதவீதத்திலிருந்து 0.78 சதவீதமாக குறைந்து விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக சென்னையில் இனி கொரோனா பெருமித்தொற்றாக மாறாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. கொரோனா பாதிப்பு சென்னையில் 100 என்ற எண்ணிக்கை குறையும்போது மட்டுமே இதன் ஆபத்து முழுமையாக குறைந்து விட்டதாக உறுதி செய்ய முடியும் என கொரோனா சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.