ஏப்ரல் 21, 2021, 10:24 காலை புதன்கிழமை
More

  மாஸ்க் இல்லைன்னா 200 ரூவா அபராதம்னு சொல்லிட்டு… இலவசமா அதை வழங்கிய இன்ஸ்பெக்டர்!

  இனிமேல் நாங்கள் முக கவசம் அணியாமல் வெளியே வர மாட்டோம் கட்டாயமாக முக கவசம் அணிந்து வெளியே வருவோம்

  madurai-inspector-kalaivani-mask-distribute
  madurai-inspector-kalaivani-mask-distribute

  மதுரை: அம்மா உணவகத்தில் உணவு வாங்க காத்திருந்தவர்கள் முகக் கவசம் இல்லாமல் இருந்ததைக் கண்ட காவல் ஆய்வாளர் முகக் கவசம் இலவசமாக வழங்கி கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொண்டார்…

  மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சுப்ரமணியபுரம் காவல் சட்டம் ஒழுங்கு .ஆய்வாளர் கலைவாணி… ரோந்து சென்று கொண்டு இருந்தார்! அப்போது மதுரை பழங்காநத்தம் அம்மா உணவகம் அருகே உணவு வாங்க காத்திருந்த முதியவர்கள் மற்றும் முதியவர்கள் பலர் முக கவசம் இல்லாமல் இருந்ததைப் பார்த்த அவர் உடனடியாக வாகனத்திலிருந்து இறங்கி ஒலிபெருக்கி மூலமாக.. முக கவசம் இல்லாமல் யாரும் வெளியே வரக் கூடாது எனவும். மீறி வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் எனவும் தெரிவித்தார்!

  madurai-mask4
  madurai-mask4

  பின்னர், அவர் அங்குள்ள முதியோர்களுக்கும் அவர் வைத்திருந்த முக கவசம் அனைத்தையும் இலவசமாக வழங்கினார்! மேலும் அங்குள்ள முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஒலிபெருக்கி மூலமாக வைரஸின் தன்மை குறித்து விளக்கினார்

  அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தை பொது மக்கள் வரவேற்றனர்… அதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் இனிமேல் நாங்கள் முக கவசம் அணியாமல் வெளியே வர மாட்டோம் கட்டாயமாக முக கவசம் அணிந்து வெளியே வருவோம் என்றனர்.

  • செய்தி: ரவிசந்திரன், மதுரை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »