இதுவரையில்லாத உச்சம்! தமிழகத்தில் 6,472 பேருக்கு தொற்று உறுதி!

சற்றுமுன் சென்னை தமிழகம்
corona-virus-4
corona-virus-4

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதன்முறையாக 6,000ஐ கடந்தது. இன்று 6,472 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதன்முறையாக 6,000ஐ கடந்தது. அதே போல், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,000ஐத் தாண்டியது 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இது இதுவரையில்லாத அளவு என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,232ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 5,210 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,92,964ஆக உயர்வு கண்டுள்ளது. 

தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,36,793ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

district-wise-corona-case-july-23
district-wise-corona-case-july-23

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.