தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களைப் போன்று, கர்நாடகாவில் இந்திரா மலிவு விலை
உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன…
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மலிவு விலை உணவகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள்
கலந்துக் கொண்டனர்.
முதல்கட்டமாக 101 இடங்களில் இந்த உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு
உணவகத்திலும் 500 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை உணவாக இட்லி, பொங்கல் உள்ளிட்டவை 5 ரூபாய்க்கும், சாம்பார், தயார்
உள்ளிட்டவை அடங்கிய மதிய சாப்பாடு 10 ரூபாய்க்கும் வழங்கப்படும்.




