திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், கொல்லத்தில் கூலி வேலை செய்து
வந்தார். கடந்த 6ம் தேதி அன்று இரவு 10.30 மணிக்கு முருகனும், முத்துவும்
மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கிய 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு
மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு முருகனைத் தவிர மற்ற 3
பேரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பல்வேறு மருத்துவமனைகளுக்கு முருகனை அழைத்துச் சென்றும் எங்கும் அவருக்குச்
சிகிச்சை அளிக்கவில்லை. தொடர்ந்து 7 மணி நேர அலைச்சலுக்குப் பிறகு அவர் உயிர்
பிரிந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கேரள அரசின் மீது கண்டனங்கள் பாய்ந்தது. இதையடுத்து சம்பவத்திற்கு முதல்வர்
பினராயி விஜயன் மன்னிப்பு கேட்டார்.
மேலும், மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் மரணமடைந்த, முருகனின் குடும்பத்தாரை,
முதல்வர் பிணராயி விஜயன் இன்று சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
முருகன் குடும்பத்தாருக்கு அவசியமான உதவிகளை அரசு வழங்கும் எனவும், அவர்களின்
இழப்பிலும் துயரத்திலும் கேரள மக்கள் பங்குகொள்வதை தெரிவித்தார். மேலும்
முருகன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என முதல்வர்
தெரிவித்தார்.




