முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக
சிறையில் வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை பரோலில் செல்ல தமிழக அரசு அனுமதி
வழங்கியுள்ளது.
91-ல் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவளான் 26 ஆண்டுக்கு பிறகு வெளியில்
வருகிறார்.
தந்தை குயில்தாசனை கவனித்துக் கொள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் சிறை விடுப்பு
அளிக்கப்பட்டுள்ளது. உடல்நலமிக்காத தந்தை பார்க்க தமிழக அரசு பரோல்
வழங்கியுள்ளது.
அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு அமைச்சர் சண்முகம் பரோல்
வழங்கியுள்ளார்.




