கொரோனா… இன்று தமிழகத்தில் 5,881 பேருக்கு பாதிப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம்
corona-virus-4
corona-virus-4

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று 5881 பேருக்கு கண்டறியப்பட்டது. இன்று தமிழகத்தில் 97 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது .இதை அடுத்து, கொரோனாவுக்கு இதுவரை தமிழகத்தில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,45,859 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,013 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது , இதை அடுத்து, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 99,794 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 97 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 3,935 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதை அடுத்து, இதுவரை 1,83,956 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

corona district wise report july 31 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.