
கள்ள உறவு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து வீட்டில் புதைத்த நபரை போலீஸ் கைது செய்தது
உத்தரபிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவின் பிஸ்ரக்கின் சிபயனா புஸுர்க் கிராமத்தைச் சேர்ந்தவர் – ராகேஷ் .இவர் 2012 ம் ஆண்டு ஈடாவை சேர்ந்த ரத்னேஷ் என்ற பெண்ணை மணந்தார்.
பிறகு அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. அதன் பிறகு அவருக்கு அந்த பகுதியில் வசிக்கும் ஒரு பெண் போலீசுடன் கள்ள உறவு ஏற்பட்டது .
இந்த கள்ள உறவு விஷயமாக ராகேஷுக்கும் அவரின் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது . இதனால் அந்த ராகேஷ் தன்னுடைய மனைவியினை விட்டு விட்டு அந்த பெண் போலீசுடன் வாழ விரும்பினார். அதனால் இதற்கு இடையூறாக இருந்த , தனது மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் கொன்றார் – பிறகு அவர்களின் உடல்களை அவரது வீட்டிற்குள் புதைத்தார்.
அதன் பிறகு அந்த மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என்று போலீசில் புகார் தந்தார். அந்த பெண்ணின் குடும்பத்தினரே கடத்தி விட்டதாக புகார் தந்தார்.
மேலும் இறந்த பெண்ணின் குடும்பத்தினரும் அந்த பெண்ணின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தனர் .அதன் பேரில் போலீசார் அந்த ராகேஷை பிடித்து விசாரித்த போது, அவருக்கும் ஒரு பெண் போலீசுக்கும் இருக்கும் கள்ள தொடர்பால் அவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றதையும் .
பிறகு அவர்களின் உடலை வீட்டில் புதைத்ததையும் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த வீட்டிலிருந்து அவர்களின் உடலை தோண்டி எடுத்து விசாரித்து வருகின்றனர்.



