சென்னை: 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் இன்று தொடங்கின. தமிழகம், புதுவையில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர். இந்தத் தேர்வு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 3,298 தேர்வு மையங்களில் 10.72 லட்சம் பேர் எழுத உள்ளனர். தனித்தேர்வர்களாக 50,429 பேர் எழுதுகின்றனர். தேர்வுகள் காலை 9.15 மணிக்கே தொடங்குகின்றன. 9.30 மணிக்குத் துவங்கி, முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும். நண்பகல் 12 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வுப் பணிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். 5,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 578 பள்ளிகளிலிருந்து 57,344 பேரும், புதுச்சேரியில் 291 பள்ளிகளிலிருந்து 19,559 பேரும் 10-ஆம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.
10-ஆம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்
Popular Categories



