December 6, 2025, 3:08 AM
24.9 C
Chennai

நான் ஜெயலலிதாவின் மகள்; டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் : ஜனாதிபதி, பிரதமருக்கு பெண் கடிதம்

IMG 20170830 WA0022 - 2025

நான் ஜெயலலிதாவின் மகள்; டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் ஜனாதிபதி-
பிரதமருக்கு பெண் கடிதம்*

நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் டிஎன்ஏ சோதனை நடத்த கோரி ஜனாதிபதி-
பிரதமருக்கு பெங்களூரு பெண் கடிதம் எழுதி உள்ளார்.

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் இருக்கும் வரை திருமணம் செய்து
கொள்ளவில்லை. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா
என்கிற அம்ருதா (வயது 38) என்ற பெண் ஜெயலலிதா தன் சொந்த தாய் என கூறி பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 1960-ம் ஆண்டு பிரபல நடிகையாக இருந்த என் பாட்டி சந்தியா- ஜெயராம்
தம்பதியின் 3 பிள்ளைகளில் என் தாய், ஜெயலலிதா என்கிற கோமளவள்ளியும் ஒருவர்.
அவர் மகள் தான் நான். என் பெயர் மஞ்சுளா என்கிற அம்ருதா என்றும், அம்மு
என்றும் என்னை செல்லமாக அழைப்பர். பெற்றோரை இழந்த பின் என் தாய் மன
அழுத்தத்துக்கு ஆளானார். அப்போது தெலுங்கு நடிகர் சோபன்பாபு என் தாய் மீது
அதிக அக்கறை காட்டினார். அவர் பராமரிப்பில் என் தாயார் மீண்டும் இயல்பு
நிலைக்கு திரும்பினார். அவர்கள் இடையிலான நட்பு காதலாக மாறியது. இருவரும்
சேர்ந்து வாழ்ந்தனர். திருமணம் செய்ய முடிவு செய்தனர் என்றாலும்,
சோபன்பாபுவின் முதல் மனைவியின் எதிர்ப்பால், திருமணம் நின்று போனது.

கர்ப்பமாக இருந்த என் தாய், 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி என்னை
பெற்றெடுத்தார். சம்பிரதாயமிக்க குடும்பம் என்பதால் ஜெயலலிதா, சோபன்பாபு உறவை
ஏற்க எங்கள் குடும்பத்தினர் மறுத்தனர். இதனால் தன் குழந்தையை தன் சகோதரி
சைலஜாவிடம் என் தாய் ஒப்படைத்தார். பெங்களூருவில் பணியாற்றி வந்த சைலஜா-சாரதி
தம்பதியினர் என்னை சொந்த மகளாகவே வளர்த்து வந்தனர். ஆனால், ஜெயலலிதாவின் மகள்
என்ற ரகசியத்தை எங்கும் கூறவில்லை. அவர்களிடம் ஜெயலலிதா சத்தியம்
வாங்கியுள்ளதாக தெரிகிறது.

1996-ல் என்னிடம் ஒரு சீட்டு எழுதி கொடுத்த சைலஜா சென்னை சென்று ஜெயலலிதாவை
சந்தித்து வரும்படி கூறினார். நானும், போயஸ் கார்டனுக்கு சென்று அவரை
சந்தித்தேன். என்னை பார்த்தவுடன் வாரி அணைத்து பாசத்தை காட்டி உபசரித்தார்.
இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதன் பின் பலமுறை அவரை சந்தித்தேன். ஆனால்
ஒரு முறை கூட என் சொந்த தாய் என்று கூறியதில்லை. எந்த காரணத்தினாலும்
அரசியலுக்கும், சினிமாவுக்கும் வரவேண்டாம் என என்னை எச்சரித்திருந்தார்.

ஜெயலலிதா இறந்த பின் தீபா, தீபக் ஆகியோர் தான் என் அம்மாவின் சொத்துக்கு
வாரிசுதாரர்கள் என செய்தி வெளியானது. இதை பார்த்த அமெரிக்காவில் உள்ள என்
உறவினர் ஜெயலட்சுமி, ஜெயலலிதாவின் ஒரே மகள் நான் தான் என்பதை என்னிடம்
கூறினார். பசவனகுடியில் வசிக்கும் மற்றொரு உறவினர் லலிதாவும், இவ்வி‌ஷயத்தை
உறுதிபடுத்தினார். நான் பிறந்தபோது ரஞ்சினி ரவீந்திரநாத், லலிதா ஆகியோரும் என்
தாயாரை பராமரித்துள்ளனர்.

அவர்களுக்கு என் பிறப்பு ரகசியம் தெரிந்துள்ளது. ஜெயலலிதாவின் இறப்பு
இயற்கையான மரணம் அல்ல. உடல் நிலை பாதிப்பாலும் அவர் இறக்கவில்லை. 2016-ம்
ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி ஜெயலலிதா தாக்கப்பட்டுள்ளார். எனவே, சசிகலா
நடராஜன், தினகரன், தீபக் ஜெயகுமார், ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக இருந்த
ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

என் தாய் ஜெயலலிதா இறப்புக்கு சசிகலா உள்பட பலரும் காரணம். இது தொடர்பாக
உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ., சிறப்பு குழு விசாரணை நடத்த வேண்டும்.
இறப்பின் காரணத்தை தெரிந்து கொள்ள அவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
நடத்த வேண்டும். என் தாய், அவர் தான் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. என்னும்
மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories