தனி அணியாக செயல்பட்ட போது தமிழகத்தில் ஊழலாட்சி நடப்பதாக ஓ.பன்னீர்செல்வம்
விமர்சித்திருந்தார்.
ஊழலாட்சியை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் ஓபிஎஸ் கூறியிருந்தார்.
அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை காரணமாகத்தான் அறிவித்த போராட்டத்தை அவர்
ஒத்திவைத்தார்.
அணிகள் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றவுடன் தமிழக அரசுக்கு ஓபிஎஸ்
நற்சான்றிதழ் கொடுக்கிறார். முன்னர் ஊழலாட்சி என்று கூறிய ஓபிஎஸ் தற்போது
நல்லாட்சி என்று கூறியுள்ளார்.




