சதுர்த்தி பூஜை நடத்த அனுமதி கேட்டு… விநாயகர் வேடத்தில் வந்த இந்து முன்னணியினர்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
hindumunnani madurai - 2026

விநாயகர் பூஜை நடத்த விநாயகர் உருவ வேடமிட்டு இந்து முன்னணியினர் மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். இது விநோதமாக இருந்தது.

விநாயகர் சதுர்த்தியன்று கொரோனாவை விரட்டவும், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தவும் வேண்டி, மதுரை வண்டியூரைச் சேர்ந்த மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி எஸ். அழகர்சாமி, செவ்வாய்க்கிழமை மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

அதுவும், விநாயகர் உருவில் அமைப்பினர் புடைசூழ வந்து, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். விநாயகர் வேடமிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த இவரை, பலர் வேடிக்கை பார்த்தனர்.

இது குறித்து அவர் கூறிய போது, வண்டியூர் பகுதியில், வரும் விநாயக சதுர்த்தி அன்று, கொரோனாவை விரட்டவும், மக்கள் நோய்களில் இருந்து விடுபட்டு, நிம்மதி பெறவும், வாழ்வில் கொரோனாவால் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று மக்கள் சுபிட்சத்துடன் வாழவும் விநாயகரை பிரதிஷ்டை செய்து, தற்போதைய கொரோனா கால ஊரடங்கு விதிகளுக்குக் கட்டுப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்ய அனுமதி கேட்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.