குறுகிய சுவர்களுக்கு இடையே சிக்கிய சிறுவன்… காப்பாற்றிய போலீஸார்!

Published:

boy rescued between walls
  • இரு சுவர்களுக்கு இடையில் சிறிய சந்தில் சிக்கிய சிறுவன்.
  • பாதுகாப்பாக வெளியில் எடுத்த போலீசார்.

மாடிமேல் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறிப்போய் இரண்டு வீடுகளுக்கு இடையில் இருந்த சிறிய சந்தில் விழுந்துவிட்டான். அவனை போலீசார் காப்பாற்றினார்.

boy rescued between walls

விஜயவாடா நகரம் பவானீபுரம் லேபர்காலனியைச் சேர்ந்த சாட்ரகட்டா சோமய்யாவின் மகன் நிரஞ்சன் என்ற 6 வயது சிறுவன் தன் நண்பர்களோடு சேர்ந்து சனிக்கிழமை மாடிமேல் விளையாடிக்கொண்டிருந்தான். தவறிப்போய் இரண்டு வீடுகளின் இடையில் உள்ள சிறிய சந்தில் நிரஞ்சன் விழுந்துவிட்டான். மூச்சுவிட முடியாமல் திணறினான்.

boy rescued between walls

விஷயம் தெரிந்த பெற்றோர் செய்வதறியாது கலங்கினர்.

உடனே போலீஸாருக்கு செய்தி தெரிவித்தனர். பவானிபுரம் ஸ்டேஷன் போலீசார் வந்து சிறுவன் விழுந்த இடத்தில் வீட்டுச் சுவரில் ஜாக்கிரதையாக உடைத்து துளையிட்டு ஒரு மணிநேரத்தில் பையனை பாதுகாப்பாக வெளியில் எடுத்தார்கள்.

boy rescued between walls

இதற்கான முயற்சியில் ஈடுபட்ட எஸ்ஐ கவிதா, ஹெட் கான்ஸ்டபிள் ஸ்ரீனிவாசராவ், கான்ஸ்டபிள்கள் பவன், சலபதி ஆகியோரை உள்ளூர்வாசிகள் பாராட்டினார் கள்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!
boy rescued between walls

உடனுக்குடன் விரைந்து வந்து சாதுர்யமாக பணியாற்றி சிறுவன் உயியைக் காத்த போலீசாரை பெற்றோர் கைகூப்பி வணங்கினர்.

இந்த வீடியோவைப் பார்த்தால் எத்தனை ஆபத்தான விபத்தை எத்தனை சாமர்த்தியமாக கையாண்டார்கள் என்பது விளங்கும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img