“உங்களோட ஆட்டோகிராஃப் எனக்குப் போட்டுத் தரேளா”

“உங்களோட ஆட்டோகிராஃப் எனக்குப் போட்டுத் தரேளா”

(பெரியவாளிடம் ஏழு வயசு சின்னப் பையன்)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
​நன்றி-21-09-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)

ஒரு சமயம் பரமாசார்யா காஞ்சி மடத்துல இருந்தப்போ
அவரை தரிசிக்க ஏராளமான பக்தர் கூட்டம் நிறைஞ்சு
இருந்தது. அந்த சமயத்துல ஏழு வயசு இருக்கும் ஒரு
சின்னப்பையன் ஓடி வந்து பெரியவா முன்னால நின்னான்.

யாரும் எதிர்பார்க்காதவிதமா, மகாபெரியவாகிட்டே
“சார்…இவ்வளவுபேர் உங்களைப் பார்க்க வராளே..
நீங்க வி.ஐ.பிதானே..உங்களோட ஆட்டோகிராஃப்
எனக்குப் போட்டுத் தரேளா” அப்படின்னு கேட்டான்.

மகாபெரியவாளை அவன் ‘சார்’னு கூப்பிட்டதும்
கையெழுத்தைக் கேட்டதும் பலருக்கு பதட்டம்.
ஆசார்யா என்ன சொல்லப்போறாரோன்னு நினைச்சா.
ஆனா அவர் எதுவுமே சொல்லாம அந்தப் பையனைப்
பார்த்து மென்மையா சிரிச்சார்.

“நான் வி.ஐ.பி. எல்லாம் இல்லைப்பா. ஆமா. எதுக்கு
என்னோட கையெழுத்தைக் கேட்கிறே?”ன்னு கேட்டார்.

தன் கையில இருந்த ஆட்டோ கிராஃப் புத்தகத்தைக்
காட்டின அவன்,”இதோ பார்த்தேளா. இதில பெரிய பெரிய
முக்கியஸ்தர்கள்கிட்டே எல்லாம் கையெழுத்து வாங்கி
சேர்த்து வைச்சிருக்கேன்.உங்க கையெழுத்தையும்
போட்டுத் தந்தேள்னா பொக்கிஷமா வைச்சுப்பேன்!”
இளங்கன்று பயமறியாதுங்கற மாதிரி சொன்னான்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மடத்துக் காரியதரிசியை கூப்பிட்டார் பெரியவா.
“இந்த நோட்டுல மடத்தோட சீல் போட்டு,
ஸ்ரீமந் நாராயண ஸ்துதின்னு எழுதி உன் கையெழுத்தைப்
போட்டு இவன்கிட்டே குடு!” -சொன்னார்.

ஒரு சில நிமிஷத்துல அப்படியே செஞ்சு, ஆட்டோகிராஃப்
நோட்டை எடுத்துண்டு வந்து குடுத்தார் மடத்துக்
காரியதரிசி.அதை வாங்கிண்டவன்,”தாங்க்யூ சார்!”
அப்படின்னு சொல்லிட்டு நோட்டை பையில
வைச்சுண்டு புறப்பட்டான்.

“ஒரு நிமிஷம் நிக்கறியா?” அவனைக் கூப்பிட்ட பெரியவா,
“எனக்கும் ஒன்னோட கையெழுத்து வேணுமே போட்டுத்
தரியா?” என்று கேட்டார். சந்தோஷமா தலையாட்டினான்
அந்தப் பையன். மடத்தோட ரெஜிஸ்டர் நோட்டை
எடுத்துண்டு வரச் சொன்ன பெரியவா, அதுல அவனைக்
கையெழுத்துப் போடச் சொன்னார். சந்தோஷமா
கையெழுத்து போட்ட அவனை ஆசிர்வாதம் செஞ்சார்
ஆசார்யா.

அந்தப் பையனுக்கு தானும் ஒரு முக்கியஸ்தன் தான்
அப்படிங்கற எண்ணம் வரணும்.அப்படி வந்தாத்தான்
அவன் வாழ்க்கைல நன்னா முன்னேறுவான்,
அதுக்காகத்தான் அவனையும் கையெழுத்துப் போடச்
சொன்னேன்? மகாபெரியவா இந்த வார்த்தையைச்
சொல்லலை. ஆனா, அவரோட செயலுக்கான் காரணம்
அதுதான்கறது அங்கே இருந்த எல்லாருக்குமே புரிஞ்சுது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories