21 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நெல்லை பி.டி.ஓ., கைது!

சற்றுமுன்

நெல்லையில் 21 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது
செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் மேலநீலிதநல்லுர் வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர்
பிச்சுமணி 55.இவர்
பனவடலிசத்திரத்தை சேர்ந்த பொன்ராஜ் 35, என்ற ஒப்பந்தக்காரருக்கு 7 லட்சம்
ரூபாய் மதிப்பிலான ஆழ்குழாய் கிணறு அமைத்து
தண்ணீர் வழங்கும் இரண்டு ஒப்பந்த பணிகளை வழங்குவதற்கு 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம்
கேட்டுள்ளார். 21 ஆயிரம் ரூபாய் பணம் தர பொன்ராஜ் ஒப்புக்கொண்டார்.

பின்னர் இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.டிஎஸ்பி மதியழகன்
தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். பொன்ராஜ் தந்த பணத்தை வாங்கிய
பி.டி.ஓ.,பிச்சுமண கைது செய்யப்பட்டார்.அவருக்கு சொந்த ஊர் ஊத்துமலையாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.