தமிழகத்தில் இன்று… 5,995 பேருக்கு கொரோனா; 101 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona-virus-4
corona-virus-4

தமிழகத்தில் இன்று 5,995 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது;  இன்று ஒரே நாளில் 101 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதே நேரம்,  இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

தமிழகத்தில் இன்று 5,995 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,67,430ஆக   உயர்ந்துள்ளது

சென்னையில் இன்று 1282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. .இதை அடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,22,757ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 5764 பேர் குணமாகி வீடுகளுக்கு திரும்பினர் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,07,677 ஆக அதிகரித்துள்ளது 

தமிழகத்தில் இன்று 101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதை அடுத்து   தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6,340ஆக  அதிகரித்துள்ளது

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74,344 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை   மேற்கொள்ளப்பட்டுள்ளது  இதையடுத்து தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 39 லட்சத்தைத் தாண்டியது.  இதுவரை தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 39,23,834  ஆக அதிகரித்துள்ளது. 

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

கடந்த வாரம் ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் மீண்டும் கடந்த நான்கு நாட்களாக ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது சென்னையை அடுத்து  செங்கல்பட்டு மாவட்டத்தில் 430 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது திருவள்ளூர்  மாவட்டத்தில் 369 பேருக்கு இன்று கொரோனா உறுதி  செய்யப்பட்டது.

 மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் :

district-wise-corona-aug-21
district-wise-corona-aug-21

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.