அதென்ன… லக்ஷ்மி கணபதி?!

ஆன்மிகக் கட்டுரைகள் சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
lakshmi-ganapathi
lakshmi-ganapathi

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ஆன்மீக கேள்வி பதில்:

கேள்வி: ‘லக்ஷ்மி கணபதி’ என்றால் என்ன? லட்சுமி விஷ்ணுவின் பத்தினி அல்லவா? கணபதியோடு இருக்கும் லக்ஷ்மி யார்?

பதில்: அந்த லட்சுமி வேறு. இந்த லட்சுமி வேறு. இவையெல்லாம் மந்திர சாஸ்திரம் தொடர்பான விஷயங்கள். உபாசனை ரகசியங்கள்.

லட்சுமி என்றால் ‘லட்சண சக்தி’. அதாவது குண சக்தி. ஒவ்வொரு தெய்வத்துக்கும் அந்தந்த தெய்வத்தின் சக்தி லட்சுமி. ஐஸ்வர்யமே லட்சுமி. அந்தந்த கடவுளின் சக்தியே அந்தந்த தெய்வத்திற்கு ஐஸ்வர்யம். அதனால் அந்த தெய்வத்தின் சக்தியை லட்சுமி என்பார்கள்.

விஷ்ணு பத்னி லட்சுமிக்கும் கணபதி சக்தி லக்ஷ்மிக்கும் வேறுபாடு உள்ளது. இவற்றை புராண வடிவில் விளக்கவேண்டிய தேவை கிடையாது. மந்திர உபாசனையின் பகுதிகள் இவை.

உபாசனை செய்யும் தேவதையில் சகல தேவதைகளின் சக்திகளும் இருக்கும்.

அவ்விதமாக, பராசக்தி ‘லட்சுமி’ என்ற பெயரோடு உள்ள கௌரியாக சிவாம்சத்தில் இருப்பதாக தந்திர சாஸ்திரம் வர்ணிக்கிறது.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.