December 5, 2025, 10:02 PM
26.6 C
Chennai

உபநிஷத்களின் சாரம் அறிவதில் சாரமற்று இருப்பதேன்? ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar - 2025

ஒரு அரசனுக்கு பர்ஜு என்பவன் இடத்தில் அதிகப் பிரியம் இருந்தது. இதை கண்ட மற்ற அரசவை உறுப்பினர்களுக்கு அவன் மேல் பொறாமை ஏற்பட்டது. எனவே பர்ஜுவை கடத்தி செல்வதற்கு அவர்கள் திட்டம் தீட்டினார்கள்

ஒரு நாள் அவர்கள் அவன் கைகளை கட்டி கண்களை மூடி மிக தொலைவில் இருந்த ஓர் அடர்ந்த காட்டுக்குள்ளே அவனை தனியாக விட்டு சென்றுவிட்டனர் அவன் உதவிக்காக கூச்சலிட ஆரம்பித்தான்.

அதிர்ஷ்டவசமாக அவ்வழியே வந்த ஒரு காட்டுவாசி அவனுடைய குரலைக் கேட்டான் உடனே அவனருகில் வந்து கண்களைக் கட்டியிருந்த துணியை அவிழ்த்து கை கட்டை பிரித்துவிட்டான். பிறகு பர்ஜு நாட்டிற்கு திரும்பி போகும் வழியையும் காட்டுவாசி காண்பித்தான். தனக்கு காட்டிய பாதையில் சென்று கொண்டிருக்கையில் வழியில் மற்றொரு மனிதனை சந்தித்தான். அவனிடத்தில் இருந்தும் மேற்கொண்டு செல்லும் வழியை அறிந்துகொண்டான். இவ்வாறு தான் வழியில் சந்தித்த பலரிடமும் தகவல்களை கேட்டறிந்து அதனை வைத்துக்கொண்டு தன்னுடைய நாட்டின் எல்லையை வந்தடைந்தான்.

அவனை கடத்திய ஆட்கள் முன் எச்சரிக்கையோடு செயல்பட்டதால் அவருடைய வருகையை அவர்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள் உடனே அவனை மிரட்டி நாட்டின் உள்ளே நுழைய முடியாதபடி தடுத்தார்கள். அதற்குள் இறந்து விட்டதாக அவர்கள் ஏற்கனவே அரசனுக்கு சொல்லி வைத்திருந்தார்கள் அரசனும் அவர்களுடைய வார்த்தைகளை படிப்படியாக நம்ப ஆரம்பித்தான். கடைசியில் அரசனுக்கு இவ்விஷயத்தில் முழு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது

ஒருநாள் அரசன் தலைநகரில் இருந்து கிளம்பி காட்டிற்கு வேட்டையாட சென்றான். அங்கே பர்ஜுவை சந்தித்தான் பர்ஜுவைப் பார்த்ததும் மற்றற்ற மகிழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவனுக்கு பயம் ஏற்பட்டது. இறந்து விட்டவன் எப்படி கண்முன்னே தெரிகிறான் என்று அவனை பேய் என்று நினைத்தான் உடனே அரசன் குதிரையில் ஏறி அவ்விடத்தைவிட்டு சென்று விட்டான் தன்னைப் பார்த்த பின்பும் தன்னிடம் பேசாமல் சென்ற அரசனின் செயல் பர்ஜுவின் மனதில் குழப்பங்களையும் துயரத்தையும் ஏற்படுத்தியது.

அரசனின் கண்களில் எவ்வித தோஷமும் இல்லை. அரசனின் கண்கள் பர்ஜுவின் உண்மையான உருவத்தை தான் காட்டின. தன் மனதில் இருந்த தவறான கருத்துக்களின் காரணமாக அரசனால் சரியான முடிவிற்கு வர முடியவில்லை. அரசனின் கண்களைப் போலவே உபநிஷதங்களும் எவ்வித குற்றங்களும் இன்றி விளங்குகின்றன. அவை சரியான அறிவையே ஒருவனுக்கு உண்டாக்குகின்றன. உபநிஷத்துக்களை படிப்பவர்கள் அனைவரும் உடனே ஞானத்தை அடைந்து விடுவதில்லை. காரணம் அவர்களுடைய மனங்களில் இருக்கும் தோஷங்கள், புலன் விஷயங்களில் வைக்கும் அளவு கடந்த பற்று. தான் கற்றுக்கொண்ட தத்துவத்தில் ஏற்பட்ட சந்தேகங்கள் மற்றும் வேதாந்த கருத்துக்களை தவறாக புரிந்து கொள்ளுதல் ஆகிய தோஷங்களால் அவர்கள் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள்.

இத்தகைய குற்றங்கள் ஒருவனிடம் இருப்பதாலேயே இத்தகைய குற்றங்கள் ஒருவனிடம் இருப்பதாலேயே ஞான சாதனமாக விளங்கும் உபநிஷத்துக்கள் எவ்வித குறையுமின்றி இருந்தபோதிலும் அவற்றிலிருந்து சரியான ஞானத்தை பெறுவதற்கு ஒருவன் தவறி விடுகிறான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories