spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்விநாயகர் சதுர்த்தி: மகாகணபதியின் ஆவரண நிலைகள்!

விநாயகர் சதுர்த்தி: மகாகணபதியின் ஆவரண நிலைகள்!

- Advertisement -
valaba-ganapathi

மகா என்றால் மிகப்பெரிய என்று பொருள் நடக்க வேண்டிய பெரிய செயல்களை வெற்றி கொள்ளச் செய்பவர் கணபதி. மகா கணபதி விக்னங்களை நீக்குபவர். மகாகணபதி அபரிமிதமான சக்தி உடையவர் தந்திரம் என்ற நூலில் சிவபெருமான் கூறுவதாக கணபதியின் ஆவரண தேவதைகள் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தந்தையாகிய சிவபெருமான் தலைமகனின் பெருமைகளையும் அவரைச்சுற்றி எந்த வகையான அமைப்புகள் உள்ளன என்பதை பற்றியும் தெளிவாக கூறுகிறார். விநாயகருடைய இந்த பீட அமைப்பிற்கு பஞ்சவர்ணம் என்று பெயர் பஞ்ச என்றால் ஐந்து, ஐந்து வகையான ஆபரணங்கள்- சுற்றுக்கள் அவருக்கு உண்டு.

முதல் ஆவரணம் :

முதல் ஆவரணத்தில் கருப்பஞ் சாற்றால் ஆன கடலும் அதன் நடுவே சிந்தாமணி தீபம் என்னும் மணி தீவும் அமைந்துள்ளன. இங்கே கணபதியை வணங்குவதற்காக தேவர்களின் தலைவனான இந்திரன் , அசுரர்கள் சித்தர்கள் கூடியிருக்க ரத்தினக்கல் படுக்கை அழகுற அமைந்துள்ளது. இதைச் சுற்றி கற்பகம் ஹரிச்சந்தனம் மந்தாரம் சந்தானம் பாரிஜாதம் ஆகிய தெய்விக விருட்சங்கள் சிறப்பாக திகழ்கின்றன. இந்த விருட்சங்களை வணங்கிட எட்டுவகை ஐஸ்வர்யங்களை அளிக்கும் சக்தி கொண்டவை.

இதனருகில் விழும் மலர்கள் பவளம் மாணிக்கம் போன்று பிரகாசிப்பதோடு ஒரே சமயத்தில் மலரும்.

ரத்தின மயமான வேதிகை ஒன்று உள்ளது. பூர்ணகும்பம் தீபம் மணி போன்ற பொருட்களால் சூழப்பட்டு அழகாக விளங்குகிறது. கணபதி பீடம் செம்ம வடிவத்தோடு தேதிக்கு மேல் அமைந்துள்ளது. தர்மம் ஞானம் வைராக்யம் ஐஸ்வர்யம் என்ற நான்கு பாதங்களையும் அதன்மேல் அதர்மம் அவன் அஞ்ஞானம் அவைராக்கியம் அனைஸ்வர்யம் என்னும் நான்கு பலகைகளையும் உடையதாக விளங்குகிறது. பீடத்தின் நடுவில் பத்மாசனமும் தாமரை இதழ் போல் அமைந்து அந்த எட்டு இடங்களிலும் க முதல் க்ஷ வரை 35 எழுத்துக்கள் வியாபித்து பரவலாக உள்ளன. எட்டு கரங்களில் கரங்களில் அ முதல் ஃ வரை 13 உயிரெழுத்துக்களும் ஆயுத எழுத்தும் உள்ளன.

8 இதழ்களில் உள்ளே அறுகோண மண்டலமும் முக்கோண வடிவ கர்ணிகையும் சுற்றி வட்டமும் பூபுர ரேகைகளும் அமைந்துள்ளன. இந்த தாமரைப் பீடத்திற்கு உரிய சக்திகள் 9 பேர் தீவ்ரா ஜ்வாலினி நந்தா போகதா காமரூபிணி உக்கிர தேஜோவதீ சத்யா விக்னவிநாசீனீ ஆகியோர் சிவப்பு மேனியுடன் செந்நிற ஆடை உடுத்தியபடி உள்ளனர்.

நடுவிலுள்ள முக்கோண கர்ணிகைபீடத்தில் சுகாசனம் எனும் ஆசனத்தில் அமர்ந்து உள்ளவரே மகாகணபதி பெருமான். நாகத்தை பூணூலாக அணிந்து சென்ற மாலையுடன் கடி சூத்திரம் கடகம் அங்கதம் உதரபந்தம் முதலியன நாகா ஆபரணங்களை அணிந்து 10 புஜங்களுடன் விளங்குகிறார்.

வலமிருந்து இடம் வரை தமது 10 கரங்களில் கதை கரும்புவில் மாதுளம் கனி சூலம் சக்கரம் தாமரை நீலோத்பலம் நெற்கதிர் தனது தந்தம் ஆகியவற்றை தாங்கியுள்ளார். தும்பிக்கையில் உள்ள ஸொபாக்கிய கலசத்திலிருந்து ரத்தினங்களை இறைபபவரான இவர் வல்லபை என்னும் அம்பிகையுடன் அமர்ந்திருக்கிறார். வல்லபா தேவியோ புன்முறுவல் பெருக தன் வலக்கையால் கணபதிப் பெருமானை அணைத்துக்கொண்டு இடக்கையால் மலர்ந்த தாமரை மலரை தாங்கிக்கொண்டு அடியார்கள் கோரும் வரங்களை தரும் நோக்குடன் விளங்குகிறாள்.

கோணத்திற்கு உட்புறம் முக்கோணத்திற்கு வெளியில் மகாகணபதியின் முன்புறம் வில்வமரம் உள்ளது. அடியில் மகா விஷ்ணுவும் லக்ஷ்மியும் வீற்றிருக்கின்றனர். பொன் நிறமான வண்ணத்தில் தாமரை மலர் ஏந்திய இரு திருக்கரங்கள் ஆபரணங்களோடு திகழ்கிறாள் திருமகள் நீலமேகநிறம் நான்கு திருக்கரங்கள் அவற்றில் கதை சங்கு சக்கரம் எனப்படும் ஆயுதங்கள் வாசனை பூச்சு சகிதமாக கணபதியை நோக்கியபடி அமர்ந்து உள்ளனர்.

மகா கணபதிப் பெருமானின் வலது பாகமான தென்திசையில் கல்லால மரத்தின் கீழ் பார்வதியும் சிவபெருமானும் சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கின்றனர். பாசம் அங்குசம் அபய வரத முத்திரையுடன் நான்கு திருக்கரங்கள் உடையவள். அங்கே ரிஷப கொடியுடன் படிகம் போன்ற நிறத்தோடு மூன்று கண்கள் சூலம் பரசு அபய வரத முத்திரையுடன் தலையில் கங்கை மற்றும் பிறையோடு கணபதியை அம்பிகையுடன் ஈசன் விற்றிருக்கிறார்.

கணபதிப் பெருமானின் பின்புறம் மேற்கு திசையில் அரச மரத்தின் கீழ் ரதியும் மன்மதனும் சிம்மாசனத்தில் அமர்ந்து உள்ளனர். பொன்நிறம் நீலோத்பல மலரை ஏந்திய இரண்டு திருக்கரங்களை வாசனை மலர்கள் மணம் வீசும் நறுமணப்பொருட்கள் பூச்சு சகிதமாக ரதி தேவி திகழ்கிறாள் கரும்பு வில் மலரம்புகள் திவ்ய மாலை ஆபரணங்களுடன் மன்மதன் அழகோடு ரதிதேவி அருகில் அமர்ந்து மகா கணபதிப் பெருமானை நோக்கி கொண்டிருக்கிறார்.

இடது புறத்தில் வடக்கு திசையில் ஞாழல் என்னும் குங்கும மரத்தின் கீழ் சிம்மாசனத்தில் பூமி தேவியும் யக்ஞ வராகமூர்த்தியும் வீற்றிருக்கின்றனர். இருவரும் நீலோத்பல மலரின் வண்ணத்தோடு உடையவர்கள் வெண்மையான சேலை உடுத்தி மாலையணிந்து கிளி ஏந்திய இரண்டு திருக்கரங்களோடு திகழ்கிறாள் பூதேவி பரிமல பூச்சு ஆபரணங்களுடன் சக்கரம் வரத முத்திரை அபயமுத்திரை கைகளில் தாங்கி கொண்டு விளங்கும் யக்ஞ வராகமூர்த்தி பூதேவி அருகில் அமர்ந்தபடி மகா கணபதியையும் வல்லபா தேவியையும் பார்த்தவாறு உள்ளனர்.

முதல் ஆவரணத்தில் அங்க தேவதைகள் என்ற விசேஷமான இத்தெய்வங்கள் கணபதியின் சிம்மாசனத்தின் திக்குகளில் அமர்ந்து அழகு செய்கின்றனர்.

இரண்டாவது ஆவரணம்

மகா கணபதியின் நேர் எதிரில் உள்ள கோணத்திலிருந்து வலமாக ஆறு கோணங்களிலும் உள்ளவர்கள் ஆறு கணேசர்கள். ஆமோத கணபதி பிரமோத கணபதி சுமுக கணபதி துர்முக கணபதி அவிக்ன கணபதி விக்ன- கர்த்ரு கணபதி என்பவர்கள்.

சிவப்பு நிற மேனிகளுடன் மணமும் ஒளியும் வீசுகிற மாலையணிந்து நாகாபரணம் முக்கண்கள் பாசம் அங்குசம் அபய வரத முத்திரைகள் தாங்கிய நான்கு திருக்கரங்களோடு பிறைச் சந்திரனை சூடிக்கொண்டு வீற்றுள்ளனர். இவர்களுடன் சருத்தி ஸ்ம்ருத்தி காந்தி மதனாவதி த்ராவிணீ ஆகிய ஆறு சக்திகளும் தத்தமது கணேசர்களுடன் வரிசையாக அமர்ந்துள்ளனர். செங்கழுநீர் மலர் ஏந்தி வாசனை பூச்சு திவ்ய மாலைகளுடன் அலங்காரம் செய்து கொண்டு அழகாக ஆனந்த சிரிப்போடு வீற்றிருக்கிறார்கள்.

சங்க நிதியும் பத்ம நிதியும்

மகாகணபதி பெருமானின் வலப்பக்கம் வட்ட கோட்டிற்கும் இரு கோணங்களுக்கிடையே தனம் பொழிவதும் முத்து போன்ற நிறம் கொண்டிருப்பதும் எப்போதும் சௌபாக்கியம் தருவதுமான வசுதாரா எனப்படும் தனது தேவியுடன் விளங்குவதுமான சங்கநிதி இருக்கிறது. இடப்பாகத்து வட்டக்கோட்டில் மாணிக்க நிறம் உடைய எப்போதும் தன மழை பொழிவதுமான வசுமதீ என்ற தனது சக்தியுடன் விளங்கும் பத்மநிதியை இந்த ஆவரணத்தில் காணலாம்.

மூன்றாவது ஆவரணம்

இருதய அங்க தேவதைகள் என்று அழைக்கப்படுகின்றனர் கணபதிப் பெருமானின் தென்கிழக்கு வடகிழக்கு தென்மேற்கு வடமேற்கு பெருமானது முன்பக்கம் பின்பக்கம் ஆகிய இடங்களில் நானாவித வண்ணங்கள் உடையவர்களாகவும் சாந்தகுணத்துடனும் நமஸ்கார முத்திரை தாங்கி பெருமானையும் வல்லபயையும் நோக்கி நிலைபெற்று இதயம் பிரஸ் சிகை கவசம் நேத்திரம் அஸ்திரம் ஆகிய ஆறு தேவதைகள் தங்களது ஸ்தானங்களில் அமர்ந்துள்ளனர்.

நான்காவது ஆவரணம்

வாசனை மலர்களால் தொடுத்த மாலை வண்ணமய ஆடைகளால் அலங்கரிக்கப் பெற்றவர்களாகவும் தங்களுக்குரிய வண்ணங்கள் ரூபலாண்யங்களுடன் விளங்கும் பிராஹ்மி மாகேஸ்வரி கௌமாரி வைஷ்ணவீ வாராஹீ மாகேந்திரீ சாமுண்டா மகாலட்சுமீ என்ற மாத்ருகா சக்திகள் 8 தளங்களில் கொலு வீற்றிருக்கின்றனர். இவர்களை பிராமி முதலான சக்திகள் என்பர்.

ஐந்தாம் ஆவரணம்

திக்பாலர்களின் தானம்: எண் திசைகள் எனப்படுகின்ற கிழக்கு முதல் வடக்கு திசைகளுக்கு தலைவர்களாகவும் தமக்குரிய வாகனங்கள் ஆயுதங்கள் வண்ணங்கள் வடிவங்கள் இவைகளோடு சாந்தகுணம் ஆன முக பாவனைகளுடன் விளங்கும் இந்திரன் அக்னி யமன் நிருதி வருணன் வாயு குபேரன் ஈசானன் எனப்படும் இவர்கள் தங்கள் தளங்களில் அமர்ந்தவாறு ஐந்தாம் ஆபரணங்களை அலங்கரித்த படி உள்ளனர். மகா கணபதி வல்லபை உடன் கம்பீரமாக வீற்றுள்ள பீடத்தைச் சுற்றியுள்ள இந்த நிலைகளுக்கு பெயர் பஞ்சாவர்ணம் என்று பெயர் இந்த ஸ்தான நிலைகளை வணங்கிட நமக்கு 44 என்று கணக்கிடப்பட்ட ஸ்லோகம் ஒன்று உண்டு.

பஞ்சாவரண துதியும் பலனும்

நியமங்கள் என்று பெரியோர்கள் குறிப்பிட்ட அனுஷ்டான முறைகளை கடைபிடித்து பூஜையில் எண்வகை பொருட்களை பயன்படுத்தி வேண்டுகோள் ஒன்றை மகாகணபதி முன் சங்கல்பித்து 44 நாட்கள் உறுதி கொண்டு இளநீர் வாழைப்பழம் நெல் பொரி மோதகம் அவல் மாவு எள் கரும்பு 8 வகை நிவேதனப் பொருள் கொண்டு படைத்து வல்லபா தேவியுடன் வீற்றிருக்கும் கணபதியை மனதார வணங்கினால் ஆனால் முடியும் முன்பே பலனை அடைவார்கள் சிவபெரு நிலை தனம் தான்யம் பிள்ளைச் செல்வம் அரசன் மற்றும் மக்களை ஈர்க்கும் சக்தி நீண்ட ஆயுள் பலம் செல்வ பேரு புகழ் ஆகியவற்றை இப்பிறவியில் பெறுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe